பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 5.I. காதல் உணர்ச்சி உச்சஸ்தானம் அடையும் சமயத்தில் விந்தானது மூத்திரத் துவாரத்தின் வழியே வெளியேறும், அப்பொழுது விந்துப்பைகளும் பிராஸ்டேட் கோளங் களும் ஒருவிதமான நீரைச் சுரக்கின்றன. விந்துப்பை சுரக்கும் நீர் கட்டியாயும் உ ப் பு க் க ரி ப் ப தாயும் இருக்கும். அதுவும் பிராஸ்டேட் நீரும் சேர்ந்து சுக்கில உயிர்களைச் சுலபம்ாக நடமாடும் வண்ணம் செய்யும். அவைகளே மூத்திரத் துவாரத்திலுள்ள புளிப்பு நீரால் அழிந்துபோகாமல் காப்பாற்றவும் உபயோகமாகின்றன. விந்து பெண்குறியில் விழுந்ததும் எளிதில் வெளியே வடிந்து விடாமற் செய்யும் பொருட்டு பிராஸ்டேட் நீர் அதைக் கட்டியாக இறுக்கிவிடுகின்றது. ஆண்குறி:-இதன் வழியாக மூத்திரமும் விந்தும் வெளி யாகின்றன. ஆயினும் இரண்டும் ஒரே சமயத்தில் வெளி: வரா , விந்து வரவேண்டிய சமயத்தில் மூத்திரப்பை வாயில் அடைபட்டுக் கொள்ளும். ஆண்குறி சாதாரணமாக மூத்திரம் பெய்யும்பொழுது விரைப்பாய் இராது. ஆல்ை" காதல் உணர்ச்சி உண்டாகும்பொழுது அதன் மேற்புறத் திலுள்ள தசைகளில் இரத்தம் வந்து நிரம்பும். அந்தத் தசைகள் கடற்பஞ்சு போன்றவை. அவைகளில் இரத்தம் வரும் குழாய்கள் இரண்டும், இரத்தம் போகும் குழாய் ஒன்றுமாக அமைந்திருப்பதால் அதிகமான இரத்தம் தங்கி அதைப் பருமனாகவும் கட்டியாகவும் செய்து-கம்புபோல் நிமிர்ந்து நிற்கச் செய்யும். அதைச் சுற்றிலும் சில கோளங் கள் உள. அவை காதல் உணர்ச்சி பெருகி, சம்போகம் செய்ய வேண்டிய சமயத்தில், ஆண்குறி பெண்குறியினுள் கலபமாகச் செல்லும் பொருட்டு, வண்டிச் சக்கரத்துக்கு. மைபோடுவது மாதிரி ஒருவித நீரைச்சுரந்து, ஆண் குறியை வழவழப்பாகச் செய்யும். -- பெண் ஜனனேந்திரியம் பெண் ஜனனேந்திரியத்தில் முக்கியமான பாகங்கள் :(1) பெண்குறி, (2) சினைக்குழாய், (3) சினைப்பை என்பன வாகும்.