பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56; - விவாகமானவர்களுக்கு - பட்ட முட்டைகள் வெளியாவதும் பலப்படுவதும் உண்டு. ஒரு மாதத்துக்கு ஒரு முட்டையே வெளியாகும். சினைப் பைகள் மாறி மாறி முட்டையை வெளியாக்குகின்றன. சினைக் குழாய்கள்:--இரண்டு சினைக்குழாய்கள் கர்ப்பப் பையின் மேல் பாகத்தின் இரண்டு முலைகளிலிருந்து புறப்பட்டு சினைப் பைகளின் மேலாகக் கவிழ்ந்து நிற்கின் றன. அவை கர்ப்பப்பையிலிருந்து புறப்படுமிடத்தில் குறு கியும் பின் விரிந்தும் இறுதியில் விரல்கள் போல் பிரிந்தும் உள. ஒவ்வொன்றும் சுமார் 4 முதல் 6அங்குல நீளம் உடை யதாகும். சினைப்பையிலிருந்து முட்டை வெளியானவுடன் இந்தக் குழாயின் விரல்கள் அதைக் குழாயினுள் இழுத்துத் தன்னுடைய தசைகளின் அசைவாலும் தன்னிடம் ஊறும் ஒருவித நீராலும் கர்ப்பப்பையை நோக்கி அனுப்ப ஆரம்பிக் கின்றன. முட்டை அந்தக் குழாயைக் கடந்து கர்ப்பப் பையை அடைய ஒரு நாளாகும். அநேகமாக அந்த ஒரு நாளில் இந்தக் குழாயில் வைத்துத்தான் கரு உற்பத்தி உண்டாகின்றது. கர்ப்பப்பை : - இது ஆசனத்துவாரத்துக்கும் மூத்திரப் பைக்கும் டையில் கட்டியான சதையோடு அமைந்துள்ள ஒரு பை போன்ற உறுப்பாகும். அது காம்புப் பக்கம் கீழ் நோக்கித் தொங்கும் கொய்யாப்பழத்தைப் போன்ற உருவ முடையது. சாதாரணமாக அதன் நீளம் 3 அங்குலம், அகலம் 2 அங்குலம். கனம் 1 அங்குலம், ஆனல் அதனுள் குழந்தை வளரும்போது அக்குழந்தையின் அளவாக விரிந்து கொண்டு போகும். அதற்குத் தக்கவாறு அதன் தசைகள் உடம்பிலுள்ள இதர தசைகளை யெல்லாம் விட அதிக பல முடையனவாக அமைந்துள. அவையேதான் குழந்தை பிறக்கவேண்டிய சமயத்தில் கர்ப்பப்பையைச் சுருக் குழந்தையை வெளியே அனுப்பிவைக்கின்றன. பிரசவம் முடிந்தபின் அவை சுருங்க ஆரம்பித்து சிலவார காலத்தில் ப்ழைய ஸ்திதியை அடைந்துவிடுகின்றன. கர்ப்பப்பையில் பை என்னும் மேற்பாகமும் கழுத்து என்னும் கீழ்ப்பாகமும் உள. அவை இரண்டுக்கும் இடை யேயுள்ள துாவாரம் சிறியதாயிருக்கும். அதல்ை எந்தப் பொருளும் எளிதில் உள்ளே இடம்பெற்றுவிட முடியாது.