பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 57 மேற்பாகமாகிய பை சாதாரணமாகத் துணிப்பைகள் சாமான்கள் இல்லாவிட்டால் எப்படி ஒட்டியிருக்குமோ அப்படியேதான் இருக்கும். அதன் நீளம் ஒன்றரை அங்குலம். அகலம் ஒரு அங்குலம். அந்தப் பையின் மேற்புறத்து இரண்டு மூலைகளிலிருந்துமே சினேக் குழாய்கள் புறப்படுகின்றன. கீழ்ப்பாகமாகிய கழுத்து ஒரு அங்குல நீளமாயும் இடை யில் விரிந்தும் முனைகளில் சுருங்கியும், பெண் குறிக்குள் காலேயரைக்கால் அங்குலம் நீண்டுகொண்டும் இருக்கும். பெண்குறிக்குள் வி ர லை விட்டுப்பார்த்தால் நடு வில் சிறு பள்ளமுள்ள ஒரு கட்டியான குமிழ்போல் தட்டுப் படும். அந்தப் பள்ளந்தான் கர்ப்பப்பையின் வாயில். இந்தக் கழுத்து பருவமடைந்த சிறுமிகளுக்கு நீளமாயும்-அதிகக் குழந்தை பெற்ற பெண்களுக்குக் குட்டையாயும் - விபசாரி களுக்கு விரிந்ததாயும் - மலடிகளுக்குக் குறுகியதாயும் இருக்கும். கர்ப்பமுறுதல் ஒவ்வோரு மாதமும் வலது சினேப்பையாவது இடது சினைப்பையாவது ஒரு முட்டையை வெளியே அனுப்புகின் றது. அதை அனுப்பும் பையின் அருகேயுள்ள சினைக்குழாய் அதைக் கிரகித்துக் கருப்பையை நோக்கிச் செல்லும்ாறு அனுப்பிவைக்கிறது. சம்போகம் நடந்து ஆண்மகனுக்கு உணர்ச்சி உச்சஸ் தானம் அடையும்பொழுது விந்தானது ஆண்குறியிலிருந்து பெண்குறிக்குள் பீச்சாங்குழலில் பீச்சும்மாதிரி பல தடவை யாகப் பன்னிரண்டு ஸ்ெக்கண்டு நேரம் பாய்கின்றது. அதன் பின் ஆண்குறியை வெளியே எடுக்கும் பொழுது அப்படிப் பாய்ந்த விந்தில் பெரும்பாகம் பெண்குறிக்கு வெளியே வழிந்து போய்விடுகின்றது. பெண்குறியில் எஞ்சி நிற்கும் விந்தியிலுள்ள சுக்கில உயிர்கள் தம் வால்களே ஆட்டிக் கொண்டு நிமிஷத்துக்கு அரைக்கால் அங்குல வேகத்தில் கர்ப்பப்பைக்குள் செல்லுகின்றன. சில சமயங்களில் கர்ப்பப் பை சம்போகசமயத்தில் சுருங்கி விந்தை உறிஞ்சிவிடுகிறது. வேறு சில சமயங்களில் கர்ப்பப் வி ஒ-4