பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 67 1. மனைவி தன் தீர்மானத்தையே வற்புறுத்தலாம். கணவனுடைய இஷ்டத்தைப் பூர்த்தி செய்ய மறுக்கலாம். இவைகளும் கஷ்டமான காரியங்கள் தாம். ஆளுலும் அவள் விசேஷ மனவுறுதி படைத்தவளா யிருக்கலாம். ஆனல் அதன் பலன் யாது? தன் கணவனை - தன் காதலனை - விரோதித்துக் கொள்கிருள். தன்னை மனக் கோயிலில் வைத்துப் பூஜித்து வரும் கணவன் தன்னை வெறுக்கும்படி செய்து கொள்கிருள். சந்தோஷமும் சமாதானமும் நிலவிய வீட்டில் இப்பொழுது சண்டையும் சச்சரவுமே காணப் படும். இறுதியில் கணவனே அவள் தன் மன உறுதியால் வேசியர் வீட்டுக்கே அனுப்பிவிடவும் செய்கிருள். அப்படிப் போனபின் அவனுக்கு மனைவி என்ற் மகிழ்ச்சியேது, மக்கள் என்ற வாஞ்சை எங்கே, குடும்பம் என்ற கவலை உண்டோ? 2. ஆனல் இவ்விதமான மனவுறுதி காட்டமுடியாத மனைவி என் செய்வாள் ? கணவன் இஷ்டப்படி காதல் வெள்ளத்தில் அவனோடு தானும் மூழ்கிவிடுவாள். அதன் பயனாய் ஒன்றன்பின் ஒன்ருகக் குழந்தைகள் வந்து சேரும். இளமை, சுகம், எழில் எல்லாம் இழந்து நடுவயதிலேயே நரைக் கிழமாய் நலிவாள் , கடைசியில் கணவன் என்ருல் பயம், காதல் என்ருல் கசப்பு, வாழ்வு என்ருல் வெறுப்பு உண்டாகிவிடும். இவ்வாறு பிரமசரியத்தை அனுஷ்டிப்பதால் ஏற்படும் தீம்ைகள் எண்ணற்றனவாயினும் சில பெரியோர்கள் ஜனனேந்திரியங்களும் அதன் வேலையும் சந்தான விருத் திக்காக மட்டுமே ஏற்பட்டன என்றும், அதனால் எத்தனை குழந்தைகள் தேவையோ அத்தனை முறைகள் தாம் சம் ப்ோகம் செய்யலாம் என்றும், அப்படியேத்ான் மிருக ஜாதி களிடை நிகழ்கின்றது என்றும், அதுபோவேதான் மிருக ஜாதியிலிருந்து வந்த மனிதனும் நடக்க வேண்டிய வளுவான் என்றும் கூறுகின்றனர். ஆனல் விஞ்ஞான சாஸ்திரிகள் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிரு.ர்கள் : சந்தான விருத்தியானது, முதுகெலும்புள்ள மிருகங் களிடையே சம்போகத்தின் மூலமாகவே உண்டாவதா யிருந்தாலும், முதுகெலும்பில்ல்ாத மிருகங்களிடத்திலும்