பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - விவாகமானவர்களுக்கு - இன்பம் அநுபவிக்கின்றனர், ಲ್ಗ! அப்பொழுது வெளியா வது சுக்கில் உயிர்கள் மட்டுமே. சுரோணித உயிர் வெளி யாவது மாதவிடாய் கண்ட 14-வது நாளில், அப்பொழுதும் அது ஒருநாள் மட்டுமே சினேக்குழாயில் இருக்கும். அந்தச் சம்யம் தவறினல் கர்ப்பம் உண்டாக மாட்டாது. ஆகவே பெண் விஷயத்தில் சம்போகத்துக்கும் சந்தான உற்பத்திக்கு அவசியமான முட்டை வெளிப் பாட்டுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. குழந்தை உற்பத்திக்காகவே சம்போகம் செய்ய வேண் டும் என்று கூறுகிருர்களே, அவர்கள் கூறுவதை ஏற்றுத் கொண்டாலும் அதை அனுஷ்டிப்பது எப்படி ? அவர்கள் சொல்வதுபோல் செய்வதாயிருந்தால் குழந்தை உற்பத்தி நிச்சயம் என்ற சமயத்தில்தானே சம்போகம் செய்யலாம் ? ஆளுல் இந்த நாளில் சம்போகம் செய்தால் நிச்சயமாகக் கருத்தரித்துவிடும் என்று யாரேனும் கூற முடியுாமா? அது குறித்து அநேக ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. ஆயினும் இன்னும் நிச்சயமாய் யாராலும் முடிவு கூறமுடியாமலே இருந்து கொண்டிருக்கிறது. சினைப்பை முட்டையை வெளியாக்கிய பின் அந்த முட்டை ஒரே ஒரு நாள்தான் கருஉண்டாக வேண்டிய இட்மாகிய சினைக்குழாயில் தங்கியிருக்கும்.சுக்கில உயிர்களுடைய வயதும் 3 நாள் தான். இந்த நிலைமையில் இந்தச் சமயம் சம்போகம் செய்தால் குழந்தை உற்பத்தி iாகும் என்று நிபுணர்கள் அறுதியிட்டுக் கூறிலுைம் சாத்ாரண மக்கள்ால் அதை அறித்து கொள்ளவும் அனுஷ் டிக்கவும் அசாத்திய மன்ருே ? மிருகங்களை உதாரணமாகக் காட்டுகின்றனரே, நாம் மிருகங்களிலிருந்து வந்தவர்கள்தாம் : டார்வின் என்னும் ப்ெரியார் காட்டியபடி நம்முடைய மூதாதை குரங்குதான். ஞல் அதற்காக நாம் மிருகங்களைப் போலவே நடந்து தீர விண்டியதில்லை. நாம் மிருகங்களிலிருந்து வந்தபோதிலும் விசேஷ அறிவும் ஆற்றலும் அமைந்துவ அன்ருே அத்து டன் ந்ாம் மிருகங்களிலிருந்து பிறந்து அநேக லட்ச வருஷங் கள் ஆய்விடவில்லையா ? அன்று முதல் இன்று வரை நாம் நாளுக்கு நாள் அதிகமாக மிருத குணங்களையும் வழக்கங் கவிபும் விட்டு விலகி வருகின்ருேம் அவ்லவா ? நாகரிக வளர்ச்சி என்பதும் அதுதானே ?