பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 71. மிருகங்கள் காதல் உணர்ச்சியை அறியா. அவை தங்: களை அறியாமலே சந்தான விருத்தியை நாடுகின்றன. அதற். காக இயற்கை ஏற்படுத்தும் பருவங்களில் அவை சம்போகம் செய்கின்றன ; அவ்வளவே. ஆனல் நாமோ சம்போகத்தை சந்தானத்துக்காக மட்டுமன்றி சரீர சுகத்துக்காகவும் ஆன்ம வளர்ச்சிக்காகவும் உபயோகிக்கக் கற்று வருகிருேம். மிருகங்கள் மணம் செய்வதில்லை, நாம் மணம் செய்து: வாழ்வதையே சிறந்த வாழ்வாக எண்ணுகின்ருேம். வெறும் சரீர் இன்பமோ சந்தான உற்பத்தியோ மட்டும் நமது நோக்கமானுல் நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டி யதில்லை. கணவன் மனைவி இருவரும் காதல் மூலமாக சரீர இன்பத்தோடு ஆன்ம இன்பமும் அனுபவிக்கிருர்கள். ஆன்ம இன்பம்தானே மேலானது, சரீர இன்பம் எதற்கு, சரீர இன்பம் ஆன்ம இன்பத்துக்குத் தடையாகக் கூட இருக்குமே என்று கூறுகிருர்கள் . சரீர இன்பம் தனியாக இருக்குமானல் தாழ்ந்ததுதான் . ஆனல் சரீரம் என்பது ஆன்மாவின் கோவிலேயாகும். அவற்றில் ஒன்றைவிட்டு. ஒன்றைப் பிரித்தல் கூடாத காரியம். அத்துடன் ஆன்ம. சம்பந்தம் சரீர சம்மந்தமிருந்தால்தான் உயிருடன் இருக். கும். உலகப் பிரசித்தி பெற்ற ஞானி எட்வர்ட் கார்ப்பென் டர் சம்போகம் :ே காதலைப் பெருக்கி வளர்ப் பதாகக் கூறுகின்ருர். தம்பதிகளிடையே உண்டாகும் மனஸ் தாபங்கள் சம்போக மூலம் நீங்கி விடுவது எல்லோரும் அனு: பவத்தில் அறிந்த விஷயம். உலகில் இணைபிரியா நண்பர்களையும் சகோதர சகோ தரிகளையும் காண்கிருேம். ஆனாலும் அவர்களுடைய நட்பும் சகோதர வாஞ்சையும் காதலினும் தாழ்ந்ததே என்பதில் சந்தேகமில்லை. அதேைலயே சகல மதங்களும் கடவுள்ஆன்ம ஐக்கியத்துக்குக் கணவன் - மனைவி ஐக்கியத்தையே உவமை கூறுகின்றன. மாணிக்கவாசகர் அருளிய திருக் கோவையார் முழுவதும் இதையேதானே கூறுகின்றது. இராமலிங்க சுவாமிகள் மாணிக்கவாசகரைப் பற்றிப் பாடும்பொழுது,