பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - விவாகமானவர்களுக்கு - சேமமிகுந் திருவாதவூர்த் தேவென்று புகழ் மாமணியே நீ யுரைத்த வாசகத்தை யெண்ணுதொறும் காமமிகு காதலன் தன் கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் இன்பினும் இன்பெய்துவதே என்று பாடுகின்ருர். அந்த உண்மையை வற்புறுத்தும் பொருட்டுத்தானே பாகத்தில் ஒருவன் வைத்தான் ; பங்கயத் திருந்த பொன்னை ஆகத்தில் ஒருவன் வைத்தான் ; அந்தணன் நாவில் வைத்தான் ! இவர்களும் நம்மைப்போல் சரீர இன்பம் துய்க்கின்ருர்கள் என்றே பெரியோர் கூறுகின்றனர். மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கெர்த்த்லர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா ! என்று ஆண்டாள் திருப்பாவையில் கூறுவதும், துடிகொள் நேரிடையாள் சுரிகுழன் மடந்தை துணைமுலைக் கண்கள் தோய் சுவடு பொடிகொள் வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்கு மார்பினனே என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுவதும் காண்க - மேலும் மாணிக்கவாசகர் இல்லறத்தில் நிற்பவனே வாழ்பவன், துறவறத்தில்செல்பவன்,மாள்பவனே என்பதை, தென்பா லுகந்தாடுந் தில்லைச் சிற்றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ