பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 75 எந்நாளிலும் கர்ப்பம் உண்டாகலாம் என்றும், பலபட உரைக்கின்றமையால் இது விஷயமாக ஆசிரியர்களுக்குள் அபிப்பிராயபேதமும் குழப்பமும் இருப்பது புலனாகும். ஆயினும் சமீப காலத்தில் ஜப்பான் தேசத்து டாக்டர் ஒகினே என்பவரும் ஆஸ்திரியா தேசத்து டாக்டர்நாஸ் என் பவரும் இது விஷயத்தில் ஒரு முடிவு காண்பதற்காக, (1) முட்டையானது சினைப்பையிலிருந்து வெளியாவது மாதவிடாய் கண்ட எந்த நாளில் ? (2) அப்படி வெளியாகும் முட்டை எத்தனை நாள் சினைக்குழாயில் உயிரோடிருக்கும் ? (3) அந்த முட்டையோடு கலந்து கரு உண்டாக்க வேண்டிய சுக்கில உயிர்களின் ஆயுட்காலம் என்ன ? என்ற மூன்று விஷயங்களையும் பற்றி ஆராயலானர்கள். அவர் ஆராய்கிருர் என்பது இவர்க்குத் தெரியாது. இவர் ஆராய்கிருர் என்பது அவருக்குத் தெரியாது. ஆயினும் இருவருடைய ஆராய்ச்சி முடிவுகளும் அநேகமாக ஒத்தே இருக்கின்றன. அவர்களுடைய முடிவுகள் வருமாறு : (1) முட்டையானது சினைப்பையிலிருந்து ஒரு மாத விடாய்க்கும் மறு மாதவிடாய்க்கும் இடையில் ஒரு முறை தான் வெளியாகின்றது. (2) ஒரு மாதவிடாய்க்கும் : மறு மாதவிடாய்க்கும் இடையில் உள்ள காலம் பெண்களுக்குள் வித்தியாசமாக இருந்தாலும், முட்டை வெளியாவதற்கும் மறு பதவிடாய் காண்பதற்கும் இடையிலுள்ள ·ĦHITØl) L!) எப்பொழுதும் 14-நாட்களே யாகும். அதாவது மாதவிடாய் காண்பதற்கு 15-நாட்களுக்கு முந்திய:நாளில் தான் முடபைவெளிப்படுகிறது. (3) முட்டையின் ஆயுட்காலம் ஒரே ஒரு நாள் தான். அந்தஒருநாள்.இது சினைக்குழாயில்கோணப்படும்.