பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 97ー லாகாது, அப்படிப் புகுமானல் கர்ப்பப் பையில் விஷ முண் டாகி பல நோய்களை உண்டாக்கிவிடும். ஆதலால் டூவி. டப்பாவை பெண்குறிக்கு 2 அடிக்கு அதிகமான உயரத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. - இந்த விஷயங்களை எல்லாம் மறவாமல் விந்து வந்தமறு நிமிஷமே டுஷ் கொடுப்தா யிருந்தாலும், இந்த முறையைக் கையாண்டு கர்ப்பத்தைத் தடுத்து விடலாம். என்று எண்ணுவது தவறு :- - (1) தம்பதிகள் சம்போக இன்ப உலகில் புகுந்து மெய்மறந்து ஒருவரை யொருவர் அணைத்துக் கொண்டு. உறங்கவேண்டிய சமயத்தில் புருஷன் பெண்ணை விட்டு: விலகுவதும், பெண் எழுந்து 'டுவி தயார் செய்வதும் உபயோகிப்பதும் எவ்வளவு சிரமமான காரியம், எவ்வளவு துாரம் சம்போக இன்பத்தையும் அதல்ை உடலுக்கும் உள்ளத்துக்கும் உண்டாகும் நன்மைகளையும் பாதிக்கக் கூடிய செயல் ! * (2) அப்படி உடனே எழுந்து டுஷ் கொடுக்க எண்ணி' லுைம் எல்லோர் வீட்டிலும் சாத்தியமாயிராது. பெரும் பாலோர் ஏழைகள். அவர்கட்கு டுஷ் கொடுப்பதற்கு வசதி: யான ஸ்நான அறை உண்டோ ? செல்வந்தர் வீட்டிலும் கூட அது படுக்கையறையை ஒட்டியிருப்பதில்லையே. அத் துடன் வெந்நீர் முன்கூட்டித் தயாராக இருக்கவேண்டுமே. அப்படியே தயார் செய்து வைத்துக் கொண்டாலும் அது சம்போகம் முடியும்வரை ஆறிவிடாமல் இருக்குமோ ? அது ஆறிவிடக் கூடும் என்பதற்காக ஆசை எழாத சமயத்திலும் அவசரம் அவசரமாகவும் சம்போகம் செய்ய வேண்டுமோ? அல்லது ஆருமல் இருப்பதற்காக 'தெர்மாஸ் பிளாஸ்க்' என்னும் பாத்திரத்தை வாங்கிக் கொள்ள வேண்டுமோ ? . அது ஏழைகளுக்குச் சாத்தியமானதுதான ? (3) விந்து வந்தவுடனே எழுது-வெந்தால் நல்ல மருந்தை அளவாகக் கரைத்து-பெண் குறி வாயிலை இறுக்கி வைத்துக்கொண்டு-இரண்டடி உயரத்தில் டப் ப்ாவை மாட்டி வைத்து-குந்தி உட்கார்ந்து டுஷ் கொடுத் துக் கழுவினாலும் விந்து முழுவ்தையும் கழுவி வெளியாக்கி விட்டதாய் நிச்சயித்துவிட முடியாது. 燃 iண் குறி மடிப்