பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

9

வரவர விவாக ரத்து ஆண்களின் வாழ்வையே அதிகம் பாதிக்கிறது என்று ஒரு அமெரிக்கக் கணக்கு கூறுகிறது. ஆண்டு தோறும் கணவன் மாஜி மனைவிக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சம் அவனது பணப்பையைக் கரைக்கும் பெருந் தொகையாகவே தோன்றுகிறது அவனுக்கு. அத்துடன் அது அநாவசியமான செலவும் கூட விவாக ரத்து செய்யப்படுகிற மனைவி சும்மாவா இருக்கிறாள்? அவள் மறு விவாகம் செய்வதை ஒத்திப் போட்டு வந்தாலும்-அல்லது மறுவிவாகமே வேண்டா மென்று துணிந்து விட்டாலும்-புனித வாழ்வு வாழ்வ தில்லையே. சமூகப் பட்டுப் பூச்சியாக, நாகரிக உலக வண்ணத்திப் பூச்சியாக, இரவு தோறும் இஷ்டப்பட்ட ஆண்களோடு கும்மாளமிட்டுத் திரிகிறாள் அந்தக் தளுக்குக்காரி. அவள் உரிமை அது, அதிலே குறுக் கிட சட்டம் உரிமையளிக்க வில்லை. ஆனால் மாஜிக் கணவன் அவள் போக்கை ஆட்சேபித்து, குறிப்பிட்ட பணத்தைக் கொடுக்காம லிருந்தால், அவனை கோர்ட்டுக்கு இழுக்க அவளுக்கு உதவி புரிகிறது சட்டம்.

குழந்தைகள் தாயுடனேயே வாழவேண்டும் என்று விதிக்கப்படுவதால், தந்தைக்கு அதிகக் கவலையும் மனக் கஷ்டமும் ஏற்படுகிறது. பொருளாதாரக் கவலையோ மனத்துயரமும் மாஜிக்கணவர்களை பரிதாபத்துக் குரியவ னாக்கி விடுகிறது.

விவாக ரத்து கோரி வழக்குத் தொடரும்படி வக்கீலை அணுகும்போது, வக்கீல் பண ஆசை கொண்டு இருவர் வாழ்வையும் துண்டிக்க முயலாமல், அனுதாபத்தோடு காபக் குறைகளை விசாசித்து பொறுத்திருந்து பார்க்கும் படி யோசனை கூறவேண்டும். ஏதோ காரணத்தால் கொதித்தெழும் உணர்ச்சிப் புயல் ஒடுக்க ஒடுங்க பரஸ்பரம் பிரிவும் பிரியமும் உண்டாகி விவாகரத்துக்கு அவசியம் இல்லாமல் போய்விடும் என்று சில அறிஞர்கன் அபிப்பிராயப்படுகிறார்கள்.