பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

i.

உண்மையாகவே, பழக்கத்தினால் பால் புளித்து விடுகிறதா ? அதிகப் பழக்கம் அலுப்புத் தருகிறது. பால புளிக்கும் என்று மனம் முணுமுணுக்கிறது.அது மனதின் குறைதான்.

மனம் செய்யும் லீலைகளினால் கணவன் மட்டும் பாதிக்கப் படுவதில்லை. மனைவியை கணவன் வெறுப்பது. போல, மனைவியும் கணவனிடம் கசப்பும் அலுப்பும் அடைவது சகஜம். அவனது குறைகளே அதிகமாக உறுத்துகின்றன மனதை. அவனே வேண்டாதவனாகி விடுகிறான்.

மனைவியிடம் அலுப்புற்ற கணவனுக்கும் வேண்டாத மனைவியின் செயல் ஒவ்வொன்றும் பெருங் குற்றமாகக் தான் தோன்றுகிறது. எரிந்து விழுகிறான். "மோறை யைப் பாரு, மூஞ்சியைப் பாரு உன்னையும் கல்யாணம் செய்து கொண்டேனே " என்று ஏசுவது அதிகமாகிறது.

கணவனிடம் வெறுப்புறும் மனைவி என்ன செய் கிறாள் தானே மனம் புழுங்குகிறாள் புலம்புகிறாள். "போயும் போயும் என்னை இப்படி இங்கே கொண்டு வந்து தள்ளினார்களே", இவ்விதம் கல்யாணம் செய்து கொடுத் ததை விட குளத்திலே கிணற்றிலே பிடித்துத் தள்ளி யிருக்கலாம்" என்று பெற்றோர்களைக் குறை கூறுவது இயல்பாகிறது.

கணவன் மீது வெறுப்புக் கொள்கிற மனைவியினால் அவ் விருவர் வாழ்வுமே பாழாகிறது. வேண்டாத மனைவி யோடு காலம் தள்ள நேர்கிற கணவனாலும் இருவர் வாழ்வும் பாழாகிறது. பரஸ்பரம் நாயும் பூனையுமாகச் சேர்கிற ஆண் பெண் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

தினம் சண்டையும் ஏசலும், அடியும் அழுகையும் தான். வசதி யிருந்தால் பெண் அம்மா வீட்டுக்கு ஓடு