பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5

5

கிறாள். அதே போல் வசதியும் ஆசையும் இருந்தால் கணவன் வேண்டாத மனைவியைத் தள்ளி வைத்து விட்டு வேறு கல்யாணம் செய்து கொள்கிறான்.

ஆகவே, என்றும் ஆணுக்கு தாராளமான உரிமை இருந்து வந்திருக்கிறது. பெண் பாடு தான் கஷ்டம் அதனால், சட்ட பூர்வமான விவாக ரத்து உரிமை பெண் ணுக்கு வரப்பிரசாதமாகத் தோன்றலாம். முக்கிய மாக, துணிவும் நாகரிக மோகமும் கொண்ட பெண்களுக்கு.

தாம்பத்ய வாழ்வில் ஏற்படும் மனப் புழுக்கத்துக்கு மாற்று விவாக ரத்து தானா ? பழக்க வேகத்தில் சிறு தவறுகள் கூடப் பெரிய குற்றங்களாகத் தோன்றும் போது, பிரிந்துவிட வேணும் என்ற எண்ணம் தோன்றும். "இந்த வீட்டிலே நான் ஒரு அடிமை. அவர் இஷ்டம் போல் இயங்க வேண்டிய மிஷின் எனக்கு உரிமை எங்கே யிருக்கு? நான் ஒரு மனைவியின்னு மதித்தால் தானே" என்று புழுங்க நேர்கிறவர்கள் நிரந்தரமாக பிரிந்து விட்டால் கூட நல்லது என்று அந்த நேரத்தில் நினைப்பது இயல்பு. அவள் பீடை, பெருந் தொல்லை. வெறும் கழுத்தறுப்பு' என்று கருதும் கணவன் "சனியன் தொலைந்தால் போதும்" என எண்ணுவதும் இயல்பே.

அவ் வேளைகளில், உணர்வின் மூடுபனியில் மூழ்கி ஒன்றாகச் சிந்திக்க முடியாமல் திணறும் சமயங்களில், போட்டி யிட்டு சண்டை போட்டு, கசப்பு வளர்ந் து பிணங்கிப் பிரிவது நவயுக உரிமையாக இருக்கலாம். ஆனால், அது வாழ்வுப் பாதையின் போக்கை சரிக் கட்டுவதாகாது.

"பழகிப் பழகி நான் புளித்து விட்டேன். பாலானா லும் அதிகமாகப் பழகி விட்டால்".....? என்று சொல்கிறாள் மனைவி.