பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6

6

"அப்படி நினைத்தது என் தவறு. நான் உண்மையை மறந்தேன். இல்லை, உணரவே இல்லை. மல்லிகை வாடாமலே இருக்குமா ? வாடாமல் இருந்தால் அதற்குச் சிறப்பு ஏது? வாடாமல்லிகையில் வர்ணக் கவர்ச்சி இருக்கும் மணம் கிடையாது. மல்லிகை உன் அழகு குறைந்தாலும் மனம் குறையவில்லை. உன் அழகின் தன்மையை இதுவரை நான் சரியாக உணர வில்லை. அசட்டை செய்து வந்தேன். நீ அதை மறந்து விட வேண்டும் என்ற கோருகிறேன்".

"மறக்காமல் என்ன, சண்டையா பிடிக்கப் போகி றேன். நீங்கள் தான் பழகிய பால் என்று"... ... ....

  • பாலைக் குறை கூறுவது தப்பு. குறை யிருப்பதாக நினைப்பது மனதின் கோளாறு. அதைச் சரியாக்கி விட்டால் பால் தினமும் ருசிக்கத் தான் செய்யும். மனநிறைவு என்ற சர்க்கரை சேர்த்தால் இனித்து விட்டுப் போகிறது என்கிறான் யோசித்துப் பார்த்த கணவன்

'இது தான் பழகிய பால்’ என்ற கதையின் தத்து வம், எண்ணிப் பார்த்தால், வாழ்க்கைக்கு ஏற்றஉண்மை கள் புரியும்.

பிரிந்து போய் வாழ்வைப் பாழடித்துக்கொள்வது சுலபம் சேர்ந்து வாழ்ந்து, குறை தவிர்த்து, குடும்ப வாழ்விலே இன்பம் காண முயல்வதே உயர்ந்த மனிதப் பண்பு

பிரிந்து போக வழி காட்டுவோர் எண்ணிலர். சேர்த்து வாழத் துணை புரிவோர் குறைவு.

மேல் நாடுகளில் இன்று விவாகரத்து செய்ய உதவுகிற கோர்ட்டுகளும் வக்கீல்களும் அதிகரித்திருப்பது தேவையற்ற போக்கு. விவாக ரத்துக்கு உதவுகிற வக்கீல் களை விட மனோதத்துவ ஆராய்ச்சி மூலம் மனித மனக்