பக்கம்:வீடும் வெளியும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 蓋發靈 தவறவில்லை. சில சமயம் சிலருடைய போக்கு ஆச்சரியம் அளித்தது அவனுக்கு. சிலரது மாறுதல் அதிர்ச்சி தந்தது. சிலருடைய சொல்லும் செயலும் நல்ல வேடிக்கைகளாகப் படுவதும் உண்டு. மேடை முதலாளி பிறவிப் பெருமாள் தேச பக்தியைத் தனது வியாபார வளர்ச்சிக்குத் துணைபுரியக் கூடிய விளம்பரச் சாதனமாக மாற்றிக் கொண்டார். அதை உணர்ந்த காந்தி, அவர் ஆற்றலுக்கு அது ஏற்றதே! என்றுதான் எண்ணிஞன். அதை அதிசயச் மாகக் கருதவில்லை. ஆல்ை சொக்குக் கவிராயரின் போக்கு அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மறியல் நடைபெற்ற காலத் திலும் அதன் பின்னரும் உணர்ச்சிகரமான தேச பக்திப் பாடல்கள் பாடி தொண்டர்களுக்கும் பிறருக்கும் உற் சாகம் ஊட்டி வந்த கவிராயரின் சேவையை காந்தி பெர் தும் மதித்துப் பாராட்டினன். கோர்ட்டிலேகூட தேச பக்திப் பாட்டை முழக்கிய அவருடைய தீரத்தை வியந்து போற்ருதிவர்தான் யார்? அதற்காக சிறைத் தண்டனை ஏற்று நெஞ்சு நிமிர்ந்து நடந்த அவருடைய வீரமும் பெருமையும் திருநகர் வட்டாரத்தினர் மனசில் கவிராயரை ஒரு ஹீரோ” ஆக்கியிருந்தது. ஆயினும், சிறைவாசம் முடிந்து வெளியே வந்த சொக்கையா தன் ஊர்வாசிகவே வெறுக்கத்தான் வேண் டும் என்று எண்ணிஞர். அவருடைய அந்த மளுே பாவத்துக்கு முக்கியமான காரணங்களும் இருந்தன. சிறைத் தண்டனை முடிந்து ஊர் திரும்பிய கவிராயர் என்னென்னவோ எதிர்பார்த்தார். ரயிலடியில் அவரை வரவேற்க மாலேயுடன் பலர் காத்து நிற்பார்கள், ஆர வாரத்தோடு ஊர்வல்மாக அழைத்துச் செல்வார்கள் என்று நினைத்திருந்தார். ஆனல் அப்படி எதுவும் நிகழ வில்லை. அவரைப் பெரிய வீரராகப் போற்றி, காணிக்கை கள் செலுத்துவோரும் அதிகம் பேர் இல்லை. சில தொண்டர்கள் அவருடைய அனுபவங்களே விசாரித்தார் கள். டீ குடியுமேன்!” என்று ஒன்றிரு தடவைகள் உப வீ. வெ. 7-445