பக்கம்:வீடும் வெளியும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器碧念 வீடும் வெளியும் சரித்தார்கள். அவர்களால் அவ்வளவுதான் செய்ய மூடியும். கவிராயர் கடைவீதி வழியாக நடந்து போனல், கடைக்காரர்கள் அவர் பெருமையை உணர்ந்து, அன் போடு அழைத்து, காப்பி சப்ளே செய்து வெற்றிலை பாக்குத் தந்து கெளரவிக்க வேண்டும் என்று ஆசைப்பட் டார். ஒன்றிரண்டு தினங்கள் சிலர் என்ன கவிராயரே, செளக்கியமா?’ என்று கேட்டார்கள். பிறகு வாய் உப சாரத்தையும் நிறுத்தி விட்டார்கள். அவர் திருநகரின் பெரிய மனிதர்களையும் பிரசங்கி களேயும் இயக்க வீரர்களேயும் சந்தித்தார். மேடை மூதலாளி போன்றவர்கள் ஊம். வந்திட்டியா? பேஷ்!" என்து உற்சாகம் இல்லாமல் சொன்னர்களே தவிர, கவிராயரின் திணித்துவம் எதையும் அங்கீகரித்து வியந்து போற்றவில்லை. இனி கவிராயர் காளமேக மாய் பொழிந்து தள்ளுவார். பொதுக்கூட்டங்களில் பாட்டுகளுக்குக் குறைவு இருக்காது’ என்று பலரும் குறிப்பிட்டார்கள். o్య |ந்த விதமான வாய் வார்த்தைகள் சொக்கை பாளின் மனக் குறையைத் தணிக்கவில்லை. அவ்வப் போது அவர்கள் ஐந்தோ பத்தோ பணமாகக் கொடுத் தால், நூறு இருநூறு என்று வசூல் செய்து அவருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தால் அவருடைய வாழ்க்கைப் பிரச்னையின் கடுமை குறைந்திருக்கும். அவ்வித உதவி எதுவும் அவருக்குக் கிட்டவில்லை. அவருடைய சொந்தச் செலவுகளுக்கும் காசு கிடைக்கவில்லை. வீட்டில் அம்மா வின் தொணதொணப்பை ஒரளவுக்காவது குறைப் பதற்கு எப்பொழுதாவது சில்லறைகள் கொடுத்து உதவு வதற்கும் வசதி ஏற்படவில்லை. - இதனுல் எல்லாம் கவிராயருக்கு திருநகர் மக்கள் மீதும், மனித சமூகத்தின்மீதும், தரித்திரம் பிடித்த’ இந்த நாட்டின் மேலும் வெறுப்பும் கசப்பும் ஏற்பட்டு வளர்ந்தன. அவற்றை வெளியிடவும் அவர் தயங்க வில்லை. பழையபடி பால்குடம், பீடி விளம்பரம், அமெச்சூர் நாடகங்கள் முதலியவற்றுக்குப் பாட்டுகள்