பக்கம்:வீடும் வெளியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 蜜爵需 எழுதிக் கொடுத்துப் பணம் பெறுவதில் அவர் சிரத்தை காட்டினர். நாட்கள் ஒரு தினுசாகக் கழிந்தன. நெருக்கடி தீராத நிலையிலே, அவருக்குத் திடீரென்று ஒரு வழி தோன்றியது. வாழ்க்கையின் நெருக்கடிகளிலும், வறுமைப் பிடியிலும்,வேலையில்லாத் திண்டாட்டத்திலும் சிக்கித் திணறிய மிகப் பலருக்கும் அந்த வழி, நல்ல தருணத்தில் கை கொடுக்கும் உபாயமாக உதவியது. பட்டாளத்தில் சேர்ந்துவிடும் செயல்தான் அது. மகாயுத்தம் பிறந்து, வளர்ந்து கொண்டிருந்தது. அதனுல் இராணுவத்துக்கு அதிகம் அதிகமாக ஆட்கள் தேவைப்பட்டனர். நான் தயார் நான் வாறேன்’ என்று வந்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்தது. கவிராயரும் அவர்களில் ஒருவராய்க் கலந்து, திருநகரை விட்டு மறைந்து போனர். காலத்தின் திருவிளையாடலையும் அது மனிதர் கரிடம் நிகழ்த்துகிற சித்துக்களையும் பார்த்து காந்தி மதிநாதன் வியப்படைந்தான். வேடிக்கை மனிதர்கள் என்பது சரிதான்!” என்றே அவன் மனம் கூறிக் கொண் டிருந்தது. 20. கால வேகம் காலம் ஒடிக்கொண்டே இருக்கிறது, மனிதர்கள் வாழ்க்கையிலும், நாடுகளின் வரலாற்றிலும் எத்தனை எத்தனையோ மாறுதல்களைப் புகுத்தியவாறு முன்னேறிச் செல்கிறது. அது. - காலத்தைக் கிழவன் என்றும், தேர் என்றும், சக்கரம் என்றும், இயந்திரம் என்றும் கற்பித்துப் பேசப் படுகிறது. காலக் கிழவன் வீச்சரிவாள் கொண்டு கண் மூடித்தனமாக அறுவடை செய்து, ஆழிப்பிலே ஆனந்தம் கண்டு முடிவிலா யாத்திரை செய்கிருன் என்பார்கள். காலத்தேர் தன் வழியில் எதிர்ப்பட்டு, சின்னபின்னப் படுகிறவற்றை சட்டை செய்யாமல் தனக்குரிய கதியில் மேலே மேல்ே போய்க் கொண்டிருக்கிறது என்று சொல் வார்கள். கண்ணற்ற கருத்து எதுவும் அற்ற, உணர்வற்ற