பக்கம்:வீடும் வெளியும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 夏鲁器 விரும்பக் கூடிய விளைவுகளும், வரவேற்கத்தகாத நிகழ்ச்சிகளும் தாமாகவே தோன்றுகின்றன. பெரிய இயந்திரத்தின் சிறு சிறு சகடைகள், ஒவ் வொன்முய் சுழலத் தொடங்கி, பெரிய சக்கரங்களைச் சுற்றச் செய்து, எல்லாம் சேர்ந்து சுழன்று திட்டமிடப் பெறும் உற்பத்தி விளைவுகளுக்கு வழி செய்வது போலவே ஒவ்வொரு பகுதியில் நிகழ்ச்சிகள் வெடித்து, எங்கும் சம்பவக் கோவைகள் தொடர்ந்து உலகின் முக்கிய மாற்றங்கள் பிறந்து விடுகின்றன. இவற்றுக் கெல்லாம் "வேளேயும் பொழுதும் முக்கியமான ஒரு காரணமாக அமையும். வெறி பிடித்த ஹிட்லரின் ஆசையும் கனவும் யுத் தத்தை விதிைத்து வளர்த்தது. வல்லரசுகள் பவப் பரி சோதனையில் ஈடுபட்டன. உலக நாடுகளின் வரலாறுகள் காலக் கரத்தினுல் மாற்றி எழுதப்பட்டுக் கொண் டிருந்தன. பாரதமும் கால சக்தியின் கவனிப்புக்கு இலக் காயிற்று. - விடுதலைக்காகப் போராடி வந்த தேசிய இயக்கத் தினர் ஆட்சிப் பொறுப்பில் அங்கம் வகித்தார்கள். பிறகு அதை உதறி எறிந்தார்கள். சிறை வாசம் பலருக்குக் கிட்டியது. அந்நியரின் ஆட்சியில் அடிமைப் பட்டுக் கிடக்கும் நாடு முழுவதுமே ஒரு சிறைக்கூடம் தான் என்று கருதிய காந்திஜி அந்தியர் ஆட்சிப் பொறுப்பை விட்டுவிட்டு, இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டியது அவசியம் என்று அறிவித்தார். *வெள்ளேயனே வெளியேறு!’ என்ற மகாத்மாவின் கட்டளை நாட்டிலே புதிய வேகமும் விழிப்பும் ஏற்படுத்தி பலத்தி கிளர்ச்சிகளுக்கு வகை செய்தது. எதிர்ப்பைக் காட்டியவர்களில் பலவிதமான மனப் பண்பு கொண்டவர்களும் இருந்தார்கள் என்பதை ரயில்வே நிலையங்கள், போலீஸ் நிலையங்கள். தபால் பெட்டிகள் முதலியவைகளைத் தீயிட்டுப் பொசுக்குதல் நாசப்படுத்துதல் போன்ற செயல்கள் எடுத்துக்காட்டின.