பக்கம்:வீடும் வெளியும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் £ 43 நான் செய்வதில்தான் எனக்கு மகிழ்ச்சியும் மன அமைதி யும் கிடைக்கும்' என்று திடமாகத் தெரிவித்தான் காந்தி, 'உன்னுடைய இந்த மனோபாவம் உனக்கே நன்மை செய்யாது. போகப் போக நீயே இதை உணருவாய்” என்று தொண்டர் எச்சரிக்கும் தொனியில் குறிப் பிட்டார். சரி, அப்படி நெருக்கடி ஏற்படுகிற போது, பார்த்துக் கொள்ளலாம். அதற்காக இப்பொழுதே தலைப்படுவானேன்?' என்று தட்டிக் கழித்தான் கர்த்தி. தொண்டசிநாதன் மட்டுமல்ல; அவனே அறிந்தவர் கள் பலரும் அவனுக்கு இந்த விதத்திலேதான் நல்லுரை புகன்ருர்கள். 'புதுமை, புரட்சி ஏதாவது செய்ய வேண்டும். திருமணம் மூலம் சமூக சேவை புரியலாமே என்று உனக்கு எண்ணம் இருந்தாலும் சொல்லு. சீர்திருத்தத் திருமணம், கலப்பு மணம் என்கிற வகை களில் ஏதேனும் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யலாம். நல்ல பெண்ணுகப் பார்த்து, நாங்களே முன்னின்று நடத்து ஒருேம்’ என்று கூட ஒரு சிலர் சிரத்தை காட்டினர்கள். காதல் கீதல் என்று எவளேயாவது பார்த்து ஏக்கம் வளர்த்து, அவள் கிடைக்காமல் போனதால் ஒரே அடியாக மனம் கசந்து போனிரா?' என்று கூட ஒருவர் கேட்டார்.

  • நீங்கள் நினைக்கிறபடி எதுவுமே யில்லை. நான்

எவளையும் காதலிக்க வில்லை. எந்த பெண்ணும் என் மீது காதல் கொண்டு விடவும் இல்லை. கல்யாணத்தில் புரட்சியோ, சீர்திருத்தமோ செய்ய வேண்டும் என்று ந்ான் ஆசைப் படவுமில்லை. உண்மையைச் சொன்னல், எனது கல்யாணத்தைப் பற்றி நான் சிந்திக்கவே யில்லை. அது பற்றி சிந்தித்து முடிவு கட்டுவதற்கு அவசர அவசியம் எதுவும் இப்போது முளைத்து விடவுமில்லை' என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்தான் அவன். பலவிதமான புத்தகங்களைப் படிப்பதி லும், தனது எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்க முயற்சிப்,