பக்கம்:வீடும் வெளியும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் வெளியும் " ; #4 பதிலும் காந்திமதிநாதன் தீவிர ஆர்வம் காட்டி வந்தான். வேறு வேலை எதுவும் இல்லாது, இப்படிப் பொழுது போக்குவதில் உற்சாகம் காட்டும் மன நிலை வளர வளர, நாம் ஒரு சோம்பேறியாக மாறி விட்டோ மோ? என்ற உணர்வும் அவனுள் தலையெடுக்கலாயிற்று. என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லே அவனுக்கு, அவளுேடு படித்தவர்களில் ஒரு சிலரை அவன் அபூர் வமாக எப்பொழுதாவது சந்திக்க நேரிடும். அவர்கள் வாழ்க்கை பற்றியும், மற்றும் பலருடைய நிலை குறித்தும் அவன் அக்கறையோடு கேட்டறிய முயலுவான். சிலர் சர்க்கார் அலுவலகங்களில் குமாஸ்தாக்கள் ஆகியிருந்தார் கள். சிலர் டாக்டர் அல்லது என்ஜினியர்களுக்கும் தேவை அதிகம் ஏற்படும்; அதனுல் தங்களுக்குப் பணம் நிறையக் கிடைக்கும் என்று கருதி,'மேல் படிப்பு படிக்கப் போயிருந்தார்கள். சிலர், பிசினஸ் செய்து கொண் டிருந்தார்கள். சொந்த வியாபாரம் என்ருே, தொழில் பிரதிநிதி என ஊர் ஊராகத் திரிந்தோ காலம் கழிப் பதில் ஈடுபட்டிருந்தார்கள். அநேகமாக, அவனுக்குத் தெரிந்த பலருக்கும் கல்யாணமாகி விட்டது. சிலருக்கு இரண்டு மூன்று குழந்தைகள் கூட இருந்தன. இவ் விவரங்களை எல்லாம் கேள்வியுறும்போது, அவன் தன்னை அவர்களோடு ஒப்பிட்டுச் சிந் தியாதிருக்க இயலவில்லை. அவர்கள் எல்லோரும் சமூக வாழ்க்கை சீராக இயங்குவதற்குத் துணை புரிகின்ற சராசரி மனிதர்கள்; அவர்கள் வாழுகிற முறை தான் ஒழுங் கானது என்றே அனைவரும் கருதினர். காந்திமதிதிர்த னும் எங்காவது குமாஸ்தாவாகவோ தொழில் துறைப் பணியாளராகவோ மாறியிருந்தால்-அல்ல்து மேல் படிப்புப் படிக்கிறேன்’ என்று கவலையில்லாமல் காலத்தை ஒட்டும் நிலையிலிருந்தால்-அவன் ஒரு விசித்திரப் பிர கிருதி' என்று எண்ணவே இடமேற்பட்டிருக்காது மற்றவர்களுககு. அவன்ைப் போல் அரசியல் தொண்டனுகவே பல வருஷங்களைக் கழித்துள்ளவர்கள். அவனோடு படித்தவர் களில் எவருமே இல்லை என்பது அவனுக்கு வியப்பாக