பக்கம்:வீடும் வெளியும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் # 1# இருந்தது. மறியல் நடந்த காலத்திலோ, அதற்குச் இல் வருஷங்களுக்குப் பிறகோ, இளமைத் துடிப்புடனும் சந்தர்ப்ப் வேகத்திலுைம் உந்தப்பட்டு அரசியலில் குதித்தவர்களில் சிலர் பிறகு சீக்கிரமே அறிவுத் தெளிவு, பெற்று விட்டதாகச் சொன்னர்கள். பணம் பண்ணுகிற' முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள் அவர்கள். உத்தியோகம், நிரந்தரமான மாத வருவாய், பெண் டாட்டி, பிள்ளைகள், உறவினர் ஊரார் வீட்டு விசேஷங் கள் என்ற வட்டத்திற்குள் அவர்களும் வளைய வள்ைய நிச்சலடித்து வந்தார்களே தவிர, நாடு, மனித குலம் என்ற விசால நோக்கு அவர்களில் ஒருவருக்குக்கூட இல்லாமல் போய் விட்டது. இதை உணர உணர காந்திக்கு இதய வேதனை அதிகரித்ததே தவிரக் குறைய வில்லை. அதுபோன்ற சமயங்களில் இவன் நண்பர் நடராச ஆணப்பற்றி எண்ணுவான். நடராஜன் தீவிரவாதியாக மாறித் திடீர் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தவன் இப்போது எங்கே இருக்கிருனே, என்ன செய்கிருனே என்று நினைத்தான் காந்தி, இடி யும், மின்னலும், கர்ஜனையும் கொட்டி முழக்கக்கூடிய பத்திரிகை ஒன்று நடத்தப் போவதாகச் சொல்லிப் போனனே நடராஜன் அப்படி ஒரு பத்திரிகையை அவன் வெளியிட்டதாகவே தெரியவில்லையே என்ற எண்ணம் தானுகவே எழும் காந்தியின் உள்ளத்திலே. நண்பன் என்ருவது ஒரு நாள் எதிர்பாராத நேரத்தில் வந்து நிற்பான். வராமலா போவான்? அவனையும் என்னைப்போல் உருப்படாதவன். உருப்படத் தெரியா தவன் என்றுதான் மற்றவர்கள் மதிப்பிடுவார்கள்: என்றும் அவன் எண்ணுவது உண்டு. இந்த ரகமான எண்ண அலைகளினல் எற்றுண்டு, அவன் எவ்விதமான முடிவுக்கும் வர இயலாதவளுகத் தவித்துக் கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் சந்தர்ப் உமே அவனுக்கு வழி வகுத்துக் காட்ட முன் வந்தது. காந்திமதி நாதன் தனியாக வீதி வழியே போய்க் கொண்டிருந்தான் நல்ல வெயில் வேளை. அச்சமயம்