பக்கம்:வீடும் வெளியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏赛程 வீடும் வெளியும் அவன் அருகே ஒரு கார் வந்து நின்றது. அவன் திடுக் கிட்டு, ஒதுங்கி, காரினுள் கவனித்தபோது ஆச்சர்ய மடைய நேர்ந்தது. உயர்நிலைப் பள்ளியில் அவைேடு படிப்பை முடிக்காமலே, கல்யாணம் செய்துகொண்டு பெரிய இடத்து மாப்பிள்ளை'யாகப் போய் விட்டசுந்தரம் ஜம்மென்று வீற்றிருந்தான். என்ன ஸார், என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டுக் கும்பிடு போட்டான் , தெரியாமல் என்ன!” என்று புன்முறுவலோடு, வணக்கம் தெரிவித்தான் காந்தி. "இந்த வெயிலில் இப்படி எங்கே கிளம்பினிங்க? அடடா, வெயிலில் நிற்கிறீர்களே? காரில் ஏறுங்கள்!' என்று வற்புறுத்தினன். காந்தி மறுத்தும் பிரயோசனம் இல்லாது போயிற்று. 23. புதிய திருப்பம் க்த் தரத்தின் வளர்ச்சி காந்திமதிநாதனுக்கு வியப்புத் தந்தது. இவன் ரொம்பப் பெரியவன் ஆகி விட்டான். தீடீர் பெரிய மனிதன்!” என்று அவனுட்ைய மனம் பேசியது. பள்ளிப் பருவத்தில் சுந்தரம் சர்வசாதாரண நபராகத்தான் இருந்தான். மக்குப் பையன் என்று மற்ற வர்கள் குறிப்பிடுவார்கள், ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு வருஷம், மூன்று வருஷம் என்று தங்கியிருந்து மேலேறிய பெருமை அவனுக்கு உண்டு. ஆணுல், ஆள் கொஞ்சம்மிடுக்காக இருப்பான். ஜோராக டிரஸ் செய்து கொண்டு, மாப்பிள்ளை மாதிரி காட்சி அளித்து வந்தான். என்னய்யா மாப்பிள்ளை! இந்த முறுக்கைப் படிப்பிலும் கொஞ்சம் காட்டக் கூடாதா?’ என்று ஒரு உபாத்தியாயர் கிண்டல் செய்வது வழக்கம். -