பக்கம்:வீடும் வெளியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் * if அந்தக் காலத்தில் அவன் ஒல்லியாக இருந்தான். நல்வ உயரம். அந்த உயரத்துக்குப் போதுமான சதைப் பிடிப்பு உடம்பிலே இல்லாததஞல் அவன் நெட்டா ந்ெட்டா என்று அகத்திக்கம்பு மாதிரி தோற்றம் பெற்றிருந்தான். அதனுல் நெட்டைக் கொக்கு" என்றும், நெட்டிலிங்க மரம் என்றும் பலரும் அவனைக் கேலி செய்து திரிந்தார்கள். இப்போது சுந்தரத்தை யாரும் அவ்விதம் கேவி செய்ய முடியாது. அவன் உருவம் மாறியிருந்தது. உயரத் துக்குத் தகுந்த பருமன். நல்ல சதை பிடிப்பு. செல்வமும் வசதியான வாழ்வும் ஏற்றியிருந்த மினுமினுப்பு எல்லாம் சேர்ந்து, காலத்தின் கை வண்ணத்தை எண்ணி வியக்கச் செய்தன. அவன் பெரிய இடத்து மாப்பிள்ளே ஆகிவிட்டான். மாப்பிள்ளைப் படிப்பு’ என்று உபாத்தியாயர் குறிப் பிட்டது பொய்த்துப் போகவில்லைதான் அவனுடைய மாமனுர் அந்த வட்டாரத்தில் செல்வாக்கானவர். பெரிய புள்ளி. அவர் பெயரால் அநேக லாரிகள் ஒடிக்கொண் டிருந்தன. இரண்டு ஊர்களில் பெரிய சினிமாத் தியேட் டர்களும் இருந்தன. எல்லாம் மாப்பிள்ளைக்குத்தான் சொந்தம். முன்பு சுந்தரத்தை அவன் இவன் என்று குறிப் பிட்டவன்தான் காந்திமதிநாதன். நீ என்று தான் அவனிடம் உரையாடி வந்தான். ஆனல், இப்போது மன சில்கூட அப்படி நினைக்க முடியவில்லை. இவர் என்று பன்மை மதிப்புக் கொடுத்தது அவன் உள்ளம். நீங்கள்’ என்று கெளரவித்தது அவன் வாய். சுந்தரத்தின் உடல் வளர்ச்சியும் உருவமும் மாத்திரம் இதற்குக் காரணம் அல்ல, பணப் பெருமையும் பெரிய இடத்து மாம் பிள்ளை அந்தஸ்தும் முக்கிய காரணம் இல்லை. சுந்தரம் தேசியக் கட்சியில் செல்வாக்குப் பெற்ற நபர்கூட "அடுத்த தேர்தலில் எம். எல். ஏ. ஆகிவிடுவார். இந்த வட்டாரத்தின் கட்சித் தீவேமை இவர் கைக்கு வரம் போகிறது” என்ற பேச்சு, திருநகரில் அடிபட்டது. அது காந்திக்கும் தெரியும். - - வீ. துெ, 8-445