பக்கம்:வீடும் வெளியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 119

இரண்டு மூன்று நாள் யோசனை பண்ணுங்க. அப்புறமாகச் சொன்னலும் சரிதான்' என்ருர் சுந்தரம்.

நீங்கள் சொல்லுவது நல்ல ஏற்பாடு என்றே எனக்கும் படுது, எனக்கு முக்கியமான அலுவல்கள் எதுவும் இல்லை. நீங்கள் எப்போது சேரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்போது முதலே நான் பணி புரியத் தயாராக வந்து விடுகிறேன்' என்று காந்தி அறிவித்தான். - அவன் பதில் சுந்தரத்துக்கு மிகுந்த மகிழ்வு தந்தது. அதை அவர் முகமலர்ச்சி காட்டியது. அவர் நன்றி உணர்வுடன் அவன் கைகளைப் பற்றினர். ரொம்ப சந்தோஷம்' என்று திரும்பத் திரும்பச் சொன்னர். காந்தி எங்கே தங்கியிருக்கிருன். எங்கே சாப்பிடுகிருன்' என்றெல்லாம் விசாரித்தார். "உங்களுக்கென்று நான் தனியாக ஒரு ரூம் தந்து விடுகிறேன். தனியாக சிறு வீடு மாதிரித்தான் இருக்கும், குளிக்கவைக்க எல்லாம் வசதிகள் உண்டு. யாராலும் உங்களுக்கு எவ்வித மான தொந்தரவும் ஏற்படாது” என்று சுந்தரம் கூறிஞர். .

  • நல்ல காலம் தேடி வருகிறது. நான் என்ன செய்வது? யாரைப் பார்த்து உதவி கோருவது என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேனே. உதவுகிறவர் அவ ராகவே வழியில் குறுக்கிட்டு விட்டார்’ என்று காந்தி யின் மனம் மகிழ்வுற்றது. தனது நன்றிப் பெருக்கை உரிய சொற்களில் வெளியிட அவன் தயங்கவில்லை.
இப்போது "நீங்கள் எங்கே போகவேண்டும்? உங் களே அங்கே கொண்டுபோய் விடுகிறேன்' என்று சுந்தரம் சொன்னர். . . . -

அவரிடம் பெரியதனமோ, பணமிடுக்கோ శ్రితుడిు என்று காந்தி கருதினன். எங்கும் முக்கியமாகப் போவ தற்கில்லை' என்று சொன்ஞன். . .