பக்கம்:வீடும் வெளியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛋爱爱 வீடும் வெளியும் இந்த நிலையில் ஊக்கமும் உற்சாகமும் பெறுவதற்குச் சாதாரண விஷயங்களைக்கூடப் பெரிதுபடுத்தி ஆரவார மும் ஆனந்தக் களிப்பும் எழுப்புவது மக்களுக்குப் பிடித்தம்ான் போக்த் ஆக அமைகிறது. இவை சுவாரஸ்யமாகப் பொழுது ப்ோவதற்குத் துணை புரிவ. தோடு, அன்ருட வாழ்வில் பற்றுதலும் பிடிப்பும் தரு கின்றன. இந்த இயக்கத்தில் திடுமெனப் புதுமையோ, வியப்போ, விசித்திரமோ, அதிர்ச்சியோ, விபத்தோ புகுகிறபோது மக்களின் உற்சாகமும், கும்பலிட்டுக் கூச்சல் போடும் சுபாவமும் கனம் பெறுகின்றன. திருநகரிலும் இவ்விதமான நிகழ்ச்சிகள் அவ்வப் போதுவெடித்துக்கொண்டு தானிருந்தன. அவற்றில் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது அவசியம். மிலிட்டரியில் சேர்ந்து திருநகரை விட்டுப் போயி ருந்த கவிஞர் சொக்கய்யா, அநேக வருஷங்களுக்குப் பிறகு திடீரென்று ஒருநாள் வந்து சேர்ந்தார். சொக் குப் புலவர் எங்கே போய் எப்படிச் செத்தாரோ என்று எண்ணியிருந்த ஊர்வாசிகள் அவரைக் கண்டதும் ஆச்சர் யப்பட்டார்கள். எல்லோரையும் அதிசயப் படுத்தும் விதத்தில் கவி ஞர் பல விஷயங்களைச் சொன்னர். சொக்குப் புலவர் இந்தியாவில் எங்கெங்கோ திரிய நேர்ந்தது. ராணுவத் தில் சேர்ந்த பிறகுதான், யுத்தம் முற்றிய சந்தர்ப்பத். தில், அவரும் மற்றும் பலரும் கப்பலில் ஏற்றிச் செல்லப் பட்டார்கள். நடுக்கடலில், அவர்கள் கப்பல் ஜெர்மன் காரனின் தாக்குதலுக்கு இலக்காயிற்று. கப்பலில் இருந் தவர்கள் கைது செய்யப்பட்டு, ஜெர்மனிக்குக் கொண்டு போகப் பட்டனர். பிறகு, நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கும் ஹிட்லருக்குமிடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந் தத்தின்படி, இந்திய வீரர்கள் போஸிடம் அனுப்பட பட் டார்கள். அவர்கள் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ'த் தில் சேர்க்கப்பட்டர்கள், அவர்களில் சொக்குப் புலவ. கும் ஒருவர். இப்போது அவர் வெறும் புலவர் அல்ல. ராணுவத்தில் சேர்ந்து, யுத்தத்துக்குப் போய் விட்டு