பக்கம்:வீடும் வெளியும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ళ్ల வீடும் வெளியும் ரமே. நேதாஜி சொக்கப்பா' மீண்டும் பழைய சொக் கய்யா ஆகிவிட்டார். இதில் அவருக்குத்தான் நஷ்டம் வருத்தம் எல்லாம். அவர் பழையபடி புலம்பித் திரியலாளுர் வாழ்க்கை பெரிய சுமையாகி அவரை அழுத்துகிறது என்று சொன் ஒர் பிறகு, சிலரிடம் சிறிது சிறிதாகப் பணம் உதவி பெற்று முக்கியமான ஒரு இடத்தில் டீக் கடை ஒன்று திறந்து விட்டார். அதற்கு அவர் வைத்த பெயர் நேதாஜி தேநீர் விடுதி” என்பதுதான். 'இது சுதந்திரமான தொழில். காசும் புரளும். பசித்தவர்களுக்குப் பணியாற்றும் புண்ணியமும் உண்டு. வருகிறவர் போகிறவர்களிடம் நமது வாழ்க்கை அனுப வங்களைச் சுவையாக அளந்து பொழுது போக்கவும் வசதி இருக்கிறது!’ என்று மழ்ந்து போளுர் அவர். 25 புதிய குழப்பம் தனது எதிர் காலம் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டி ருந்த காந்திமதிநாதனுக்கு, அவன், எதிர்பாராத விதத் திலே ஒகவே கிடைத்ததும் அவனுடைய பிரச்னைகள் பல எளிதில் தீர்ந்து விட்டதாகவே தோன்றியது. உறை விடம், .ணவுக் கவலை, உத்தியோகப் பிரச்னை எல்லாம் இவ்வளவு சீக்கிரத்தில், மனசுக்குப் பிடித்தவகையில் நிறைவேறி விடும் என்று அவன் கனவில்கூட எண்ணிய தில்லை. ஆகவே, தனக்கு உதவி செய்த "நல்ல கால'த் தின் மீது அவனுக்கு நன்றியும் நம்பிக்கையும் ஏற்பட் டன. தேடி வந்து தனக்கு உதவிய சுந்தரத்திடம் அவ னுக்கு மதிப்பு உண்டாயிற்று. சுந்தரம் அவனுக்கு எந்தவிமான குறையும் ஏற்படா மல் கவனித்துக் கொண்டார், பத்திரிகைகள் புத்தகங் கள் பலவும் தாராளமாகக் கிடைக்க வழிசெய்தார்; அவனுக்கு வேலை என்று சுமையாகவும் அலுப்புத் தரக் கூடியதாகவும் எதுவும் இல்லை. கடிதங்கள் எழுதுவது,