பக்கம்:வீடும் வெளியும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 芷筠 ஆண்டுவிழாத் தேதியை இரண்டு தடவை இவருக்காக ஒத்தி வைத்துமாயிற்று. இனியும் தள்ளிப்போட முடி யாது. இவரிடம் நேரில் பேசி முடிக்கவே வந்திருக் கிருேம்” என்று சொன்னர்கள். தயவு செய்து நீங் களும் ஒரு வார்த்தை அவரிடம் சொல்லுங்கள்’ என்று. சுந்தரத்திடம் கோரிஞர்கள். அவரும் சரி என்று தலையசைத்து விட்டுப் போளுர், புன்னேவனத்தோடு பேசிக்கொண்டிருந்த போது, வேளையாள் வந்து, இரண்டு பேர் உங்களைப் பார்க்க வந்திருக்கிருங்க. ரொம்ப நேரமாச்சு: வெளியூர், திரும்பிப் போகணும்னு சொல்கிருங்க" என்று தெரிவித் தான போகட்டுமே! நானு தடுத்து நிறுத்தியிருக் கிறேன்?' என்று கிண்டலாகச் சொன்னர் புன்னவனம். 'ஏதோ ஆண்டு விழாவாம். உங்கள் சொற்பொழி வுக்கு...' என்று இழுத்தார் சுந்தரம். . வேலையத்தவனுங்க பொழுது விடிஞ்சா, பொழுது போளுல், இதே தொல்லேதான், அங்கே மகாநாடு, இங்கே ஆண்டு விழா, அந்த எழவு, இந்த இது என்று பிராணன வாங்குகிருங்க!... ஊம் ஊம் கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லு.” என்று பிரசங்கியார் ஆளிடம் சொல்லியனுப்பிஞர். 'வாறேன்னு சொல்லவேண்டியது தான். வேறே என்ன பண்றது? அந்தத் தேதியிலே அங்கே போகாமல் இருந்தால் போகுது; இந்த மாதம் ஏகப்பட்ட வேலே. ரொம்ப அலைச்சல்' என்று அவர் அலுத்துக் கொண்டார். சுந்தரம் லேசாகச் சிரித்து வைத்தார். வேறு எது வும் சொல்லவில்லை. வெளியே வந்ததும், காத்திருந்த இரண்டு பேரும் திரும்பவும் கும்பிடு போட்டார்கள். உள்ளே போங்க. அவர் உங்க ஊருக்கு வருவார். நானும் சொல்வியிருக் கிறேன்' என்று ஜம்பமாகக் கூறிஞர் கந்தரம். அவ்விருவரும் வாயெல்லாம் பல்லாக முகமலர்ந்து, தங்கள் நன்றியை எப்படித் தெரிவிப்பது என்று புரியாது தவித்தார்கள். . . - வி. வெ. 9-445