பக்கம்:வீடும் வெளியும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 வீடும் வெளியும் அந்த அப்பாவிகளைப் பார்க்கப் பார்க்க காந்திமதி தாதனுக்கு இரக்கமாக இருந்தது. அவர்களிடம் சுலப மாக நல்ல பெயர் பெறுவதற்காக சுந்தரம் பொய் சொன்னதை எண்ணி அவன் மனம் குமைத்தது. சாதா ரன மக்களே ஏமாற்றிச் சுகம் பெற முயலும் புன்னே வனத்தை நினைக்க நினைக்க அவனுக்கு ஆத்திரம் பொங் கியது. "அவர் செய்வது கொஞ்சம்கூட நல்லாயில்லை. அது தியாயமோ, நேர்மையோ அல்ல’’ என்று அவன் சுந்தரத் திடம் சொன்னுன். அவர் வறண்ட சிரிப்புச் சிரித்தார். "என்ன செய் வது? அவர் சுபாவம் அப்படி இருக்கிறது. அதை நாம் மாற்ற முடியுமா?’ என்று மட்டுமே கூறினர். புன்னைவனத்தின் தயவு சுந்தரத்துக்குத் தேவை. எனவே அவரைக் குறைவாக மதித்துப் பேச இவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அவரைக் குறை கூறுவதை இவர் விரும்பவும் மாட் உார். காந்தியின் மனம் குறுகுறுத்து, அவனே மெளன மாக இருக்கும்படி செய்தது. ஆயினும் அவன் சிந்தனை சதா கனன்று கொண் திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் உண்டா யிற்று. தொண்டர் நாதனைச் சந்திக்க வேண்டும் என்று தான். அவரைக் கண்டு பேசி எத்தனையோ நாட்கள ஆகிவிட்டன : இன்று எனக்கு வேலை எதுவும் இல்லை. போக வேண்டியதுதான்' என்று தீர்மானித்தான். சுந்தரத்திடம் தெரிவித்துவிட்டு அவன் தொண்ட ரைத் தேடிப் போனுன். நாதன் வீட்டில்தான் இருந் தார். அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, அவனுக்கு மோர் தந்து உபசரித்தார். அவனுடைய நலன் வற்றி அன்போடும் அக்கறையுடனும் விசாரித்தார். "எப்படியோ சுகமாக நாள் கழியுது என்கிற வரை யில் சரிதான். ஆனல், சுந்தரத்தோடு நீங்கள் ரொமப தாள் இருக்க முடியாது என்றுதான் எனக்குப் படுது.