பக்கம்:வீடும் வெளியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 懿擎 ஆகாது என்றுதான் குறிப்பிட விரும்புகிறேன்' என்று காந்தி சொன்னன். எல்லோரும் ஒரே மாதிரித்தான் செயல் புரிய வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்வையே. நீங்கள் என்ன தான் சொல்லுங்கள், என் மனம் அதை ஏற்றுக் கொள்ளாது. தியாகத் துக்காக நிலம் என்து அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள என் அந்தராத்மா இணங்கவும் இணங்காது. இதோடு விட்டு விடுங்கள் அந்தப் பேச்சை” என்று அவன் கண்டிப்பாக அறிவித்தார். அப்புறம் அவரிடம் அவன் என்ன சொல்ல முடியும்? மனித மனம் என்பது விசித்திரமானது. அது ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக ஆட்டிவைக் இறது. ஒருவரையே வெவ்வேறு வேளைகளில் வெவ்வேறு விதமாக ஆட்டிவைக்கும் குணமும் அதற்கு இருக்கிறது’ என்று அவன் எண்ணிக்கொண்டான். தொண்டர் நாதன் வெறும் தேசபக்தராக மட்டும் வளரவில்லை; உண்மையான காந்தீய வாதியாகவும் வாழ்ந்து வந்திருக்கிருர், அதல்ைதான் காலத்துக்கு ஏற்றபடி தமது போக்குகளே மாற்றிக் கொண்டு வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொள்வதற்கு தமது இறந்த காலப் பெருமையைப் பயன்படுத்திக் கொள்ள அவர் மனம் இசையவில்லை என்று காந்திக்குத் தோன்றியது. - நியாயமான வாய்ப்புகளைக்கூடப் பயன் படுத்திக் கொள்ள விருப்பம் இல்லாமல், லட்சியத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல் புரியும் தொண்டர்கள் அபூர்வப் பிறவிகள்தான்; நாதன் போன்றவர்கள் ஒரு சிலரே இருக்க முடியும் என்று காந்தியின் உள்ளம் உணர்த்தியது. - மகாத்மாவின் ஆணைக்கு ஆட்பட்டு, அரிய செயல் கள் புரிய முன்வந்த தொண்டர்களில் பலப்பலர் வாழ்க்கைத் தீயால் கருக்கி எடுக்கப்பெற்றும், கந்தர்ப்பக் காற்றில்ை எவ்வெவ்வாருே சுழற்றி அடிக்கப்பட்டும் மாறிப்போயிருந்தார்கள். ஊக்கத்தோடும் உற்சாகத்