பக்கம்:வீடும் வெளியும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈霧器 வீடும் வெளியும் தோடும் உழைத்த சிலர் வேறு அரசியல் போக்கு களினல் வசீகரிக்கப்பட்டு, கட்சிமாறி, அந்தக் கட்சிக் காக சிரத்தையோடு பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஆட்சிப் பொறுப்பு தேசிய இயக்கத்தினர் கைக்கு வந்த பிறகு, மகாத்மாவும் மரணம் அடைந்து விட்டபிறகு, அந்த இயக்கத்தினரின் நோக்கம் பூராவும் பதவி வகிப்பதுதான்; கிடைத்த ஆளும் உரிமையை விட்டுவிடாமல் இருப்பது தான் என்ருகிவிட்டது. அவர்களுடைய நோக்கமும் செயலும் ஆட்சி, அதிகாரம், அந்தஸ்து, கெளரவம், ஆக்கினேகள் என்று வளையமிட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களோடு கொண்டிருந்த தொடர்பு குறைந்து விட டது. முன்புபோல், நாட்டு மக்களோடு நல்லுறவும் நேரடித் தொடர்பும் கொள்ள வேண்டும், ஆண்டு முழு வதும் இவை நீடித்து நிலவவேண்டும் என்ற எண்ணம் தேசிய இயக்கத்தினருக்கு இல்லை. ஆளும் கட்சி என்ருஇ விட்டதால், பதவிமோகிகளும், பணம் திரட்டுகிறவர். களும், புதிய பக்தர்களும் வலிய வந்து சூழ்கிருர்கள். மக்களின் நன்மதிப்பை சரியான வழியில் பெறமுடியா மல் போகிறபோது, பணத்தைக் காட்டியும் அதி காரத்தை உபயோகித்தும் பலம்பெற்று விடலாம் என் தம்பிக்கை, பணபலம் படைத்தவர்களுக்கு உண்டு. இத் ஒல் உண்மையான தேச பக்தர்களும் காந்தியவாதிகளும் ஒதுங்கிவிட நேர்கிறது. அல்லது, வேறு அரசியல் தத்து வங்களிளுல் கவர்ச்சிக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்வது சாத்திய மாகலாம் என்று மயக்கமுற்று அத்தத்துவங்களே போதிக் கும் கட்சியில் சேர்ந்து விடுகிரு.ர்கள். சோம்பியிருக்கும் ஒதுங்கியிருக்கும் தொண்டர்களின் சேவை தேர்தல் காலத்தில்தான் கட்சிக்குத் தேவைப்படுகிறது. தேர் தல் சமயத்தில் தானே கட்சியினரும் மக்களோடு தொடர்பு கொள்வதற்காக ஊர் ஊராக அலைந்து திரிகி. ருர்கள்:” தொண்டர் நாதன் இவ்வாறு சொன்னர், மனக் கசப்புடன் வேதனையும் அவர் பேச்சில் கலந்து ஒலி செய் ததைக் காந்தி உணர முடிந்தது.