பக்கம்:வீடும் வெளியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 夏霹 தாட்டினர், நம் ஊரார், நம்மவர் இவ்வாறு சித்திரவதை செய்யப்படுகிருர்களே! என்ற உளக்கிளர்ச்சி அவருக்கு ஏற்படவே யில்லை. மாருக, வேண்டியதுதான்! வெந் ததைத் தின்னுபோட்டு விதி வந்தால் சாவோமின்னு: கிடக்காமல், வெள்ளைக்காரன் சர்ககாரை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தால், அவன் சும்மாவா இருப்பான்? என்ற ரீதியில் அவர் கெக்கலித்து மகிழத் தவறிஞரில்லை. "பணம், மேலும் பணம், மேலும் அதிகமாகப் பணம்' என்பதை மந்திரமாக உச்சரித்தும் பணம் சேர்ப்பதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டும், உயிர்வாழ்ந்த முதலாளி ஐயாவுக்கு முதல் அதிர்ச்சியாகவும் பெரும் திாக்குதலாகவும் அமைந்தது அவருடைய í n&a$r காந்திமதிநாதன் அவர் கடை முன்னலேயே மறியல் செய்யக் கிளம்பிய நிகழ்ச்சி இது அவர் எதிர்பாராதது; எவருமே எதிர்பார்க்க முடியாதது. - காந்திமதிநாதன் கல்லூரியில் படித்துக் கொண் டிகுந்த சன். செல்வமாக வளர்ந்த பையன். அது அவனுடைய தோற்றத்திலேயே தெரியும் அவன் பார்ப்பதற்கே ஒரு இளவரசன் மாதிரி காட்சிதருவான். எந்த நேரத்தில் பார்த்தாலும், கழுவி சுத்தம் செய்யப் பட்ட அழகுப் பதுமை மாதிரி அவன் தோற்றம் அளிப்பான். காலை வெயிலில் புது வனப்புடன் மிளிரும் மலர்போலவே சதா விளங்கும் அவன் முகம், உயர்ந்த ரகத் துணிகள் அணிந்து, ஜம் என்று உலா வரும் உல்லாச புருஷன் அவன் என்றே அவனைக் காணும் எல்லோரும் எண்ணுவர். அவனுக்கென்று உள்ளமும் உணர்வும், குறிக் கோளும் ஆசைக் கனவுகளும் தனியாக இருக்க முடியும் என்று அவனுடைய அப்பாவும் அம்மாவும்.நினைத்ததில்லை. *அவன் சரியான அப்பா பிள்ளை' என்றே உறவினர் கருதினர். அவன் 'கல்யாணப் படிபபுப் படிக்கிருன்; பி. ஏ. படித்து முடித்துவிட்டால் கல்யாணச் சந்தையில் அவனுக்கு நல்ல கிராக்கி ஏற்படும்; பெரிய இடத்தி லிருந்து பணத்தோடும் நகையோடும் பெண்வரும் என்ற