பக்கம்:வீடும் வெளியும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் எனக்குத் தெரியும்-தேசபக்தி காரணமாகவும், மகாத்மா காந்தியிடம் கொண்ட பக்தி காரணமாகவும், தங்கள் உள்ளத்தை, உழைப்பை, காலத்தை தங்களு டைய வாழ்க்கையையே தேசப்பணிக்காகவும், மக்களின் சேவைக்காகவும் ೨fಿಣಗಿ ಕ್ರಿ5೧'ಗೆ ತಣಿ! பலர் இன்று இருக் கிற இடம் தெரியாமல் எப்படி எப்படியோ நாளோட் டிக் கொண்டிருக்கிறர்கள். அரை வயிற்றுச் சாப்பாட் டுக்குக்கூட வகை இல்லாமல், பரிதாபகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிருர்கள். ஆளுல்." தொண்டர் நாதன் ஏதோ ஒரு நினைவு வந்தவராய் புன்னகை பூத்தார். தொடர்ந்து சொன்னர்: அந்தக் காலத்தில் கோவலன் நாடகம் நடத்து வார்கள். நாடகத்தில் வருகிறவர்கள் இஷ்டம் போல் பாட்டும் வசனமும் பொழிந்து தள்ளுவார்கள். அதில் கண்ணகி புலம்புகிற கட்டமும் வரும். தோட்டம் போட் டவள் கண்ணகியா; மலர் முடிப்பவள் மாதவியா? மரம் நட்டவள் கண்ணகியா; பழம் பறிப்பவள் மாதவியா: இப்படி கண்ணகி பார்ட் அடுக்குவது உண்டு. அது எனக்கு அடிக்கடி ஞாபகத்தில் எழுகிறது. தேசிய விடுதலைப் போராட்ட விஷயத்திலும் இந்த மாதிரியான நிகழ்ச்சி கள்தான் நடைபெறுவதாக என் மனம் சொல்லும். நாட்டின் விடுதலைக்காக, இயக்கத்தின் வளர்ச்சிக்காக உணர்வைக் கொட்டியும், வாழ்க்கையைக் கொடுத்தும், தியாகங்கள் செய்தும் பாடுபட்டவர்கள் எத்தனையோ பேர். யார் யாரோ! அவர்களில் அநேகருக்கு கெளரவ மும் கவனிப்பும் கிட்டியிருக்கலாம். ஆலுைம், பலனே சுலபமாக எட்டிப் பறிக்கும் நிலையில் இருப்பவர்கள், வேறு யார் யாரோ தான். முன்பு இயக்கத்தின் பக்கம் அடிஎடுத்து வைக்காதவர்களும், விடுதலைப் போராட் டத்துக்கு எதிர்ப்புக் காட்டிய்லர்சளும், வசைபாடியவர் களும் இப்போது பணத்தின் துணையோடு இயக்கத்தினுள் புகுந்து பதவிக்கு வலைவீசுவது சகஜமாகிவிட்டது இயக் கத்தின் புனிதம் மங்கி மறைந்து விட்டது. புன்னே வனம் போன்ற பணுதிபதிகளும் இயக்கத்திலே செல் வாக்குப் பெற்று விட்டால், அது வேறு எப்படி இருக்க முடியும்?" -