பக்கம்:வீடும் வெளியும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖笠 விடும் வெளியும் என்ன, என்ன விஷயம்? எங்கேயிருந்து வருகிருய்? இங்கு எப்போது வந்:ாய்? இப்போது எந்த ஊரில் இருக்கிருய்? என்ன செய்து கொண்டிருக்கிருய்' என்று காந்தி கேள்விகளை அடுக்கினன். ச.அதெல்லாம் சுலபமாகச் சொல்லிவிடக் கூடிய சங்கதிகளா என்ன! நான் எவ்வளவோ மாறிப் போனேன் என்றுதான் எனக்குத் தோன்றும். நான் பழைய நடராஜன் இல்லை' என்று சொல்லியவாறே அவன் ஈலிச் சேரில் சாய்ந்தான். இங்கே யாரும் வரமாட்டார்களே?’ என்று எச்சரிக்கையோடு விசாரித். தான். அவன் பார்வை கதவின் பக்கமும், சன்னல் களின் புறமும் ஒடிஓடி மீண்டுகொண்டிருந்தது. "ஏன் இப்படிப் பயப்படுகிருய்?’ என்று காந்தி கேட்டான். "காரியமாகத்தான். நான் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறேன். இப்போது நான் தேசிய இயக்கத். தொண்டன் இல்லை. பொதுவுடைமைப் பிரசாரம் செய்து வருகிறேன். ஒரு முக்கிய விஷயமாக இந்த ஊருக்கு வந்தேன். வந்ததுதான் வ ந் தோ ேம, உன்னேயும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று நினைத் தேன். நாதன்தான் நீ இருக்கிற இடத்தைச்சொன்னர்' என்ருன். அவன் அவனுடைய இயல்பின்படி உணர்ச்சி வேகத்தோடும், இப்போது அவன் ஏற்றுக் கொண்டுள்ள புதிய தத்துவத்தில் தீவிரமான பற்று தலோடும். ஆர்வத் தோடும்தான் பேசிஞன். வறுமை மிகுந்த நம் நாட்டுக் கும் உலகத்துக்கும் விமோசனமளிக்கக் கூடியது பொது வுடைமைக் கொள்கைதான் என்று அறிவித்தான். காந்தியத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதுவும்: ஒரு மதம் மாதிரித்தான். பொருளாதார நலனுக்கு வகை செய்யும் அரசியல் திட்டமாக அது வளரவில்லை. காந்திஜீயின் பெயரைச் சொல்லியும், அவர் வளர்த்த் తిలకొల్ద్స్ பலத்தைத் துணைகொண்டும் முதலாளிவர்க்கம் லாபம் பெற்று வருகிறது. வெற்றிகரமாகச் சுரண்டிக்