பக்கம்:வீடும் வெளியும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் : கொழுக்கிற ஒருசில முதலாளிகளைப் பார்த்து, நாமும் இப்படி வாழலாமே என்று ஆசைப்பட்டு, அநேக குட்டி முதலாளிகள் தோன்றி வருகிரு.ர்கள்' என்று பிரசங்க பாணியில் பேசினுன் நடராஜன்.

  • முன்பு மக்களின் நலனுக்காகச் செயல்புரிந்த தேசபக்தர்கள் பெருகியிருந்த இயக்கத்தில் இப்போது சுயநலம் மிகுந்தவர்கள், பணத்துக்கு மேல் பணம் திரட்ட ஆசைப்பட்டுச் செயலாற்றுகிறவர்கள் பெருத்து விட்டார்கள். எம்.எல்.ஏ, எம்.பி. என்று சொல்விக் தோண்டாலும், பலர் தங்கள் சொந்தக்காரர்களின் பெயரால் லாரி, பஸ் சர்வீஸ், ரோடு கான்ட்ராச்ட், பலரகமான தொழிற்சாலைகள் போன்றவற்றை நிறுவி லாபம் அடைந்து, புதுப் பணக்காரர்களாக வளர்கிருர், கள். நாட்டின் பெயரைச் சொல்லி மக்களின் உழைப்பை யும், வாழ்வையும் சுரண்டித் தாங்கள் சுகவாழ்வு வாழ முயல்கிற இந்தரக வர்க்கம் மக்களின் உயர்வுக்கும் வளமான வாழ்க்கைக்கும்.எப்படி வழி அமைப்பார்கள்?" என்றும் அவன் கேட்டான். r

நண்பன் நடராஜனின் புதிய போக்கும் வேகமும் சாந்திக்கு முதலில் வியப்பு அளித்த போதிலும், அவன் இயல்புகளை நன்கு அறிந்திருந்ததால் "இவன் இப்படித். தான் செயலாற்ற முடியும்' என்று சகஜமாக ஏற்றுக் கொள்ள முடிந்தது அவல்ை. o சரி ஏதோ பத்திரிகை gr.voຮ້ສມໍ່ போவதாகச் சொன்னயே, அந்த முயற்சி என்ன ஆயிற்று?' என்று. காந்தி விசாரித்தான். சுதந்தரப் போராட்ட காலத்தில் பத்திரிகைகள் மகத்தான பணி புரிந்தன. மக்களுக்கு விழிப்பு உண்டாக் கவும் அந்நிய ஆட்சியை எதிர்க்கவும், அரசியல் உணர்வை வளர்க்கவும் உரிமைப்போரில் உற்சாகம் பெறச் செய்ய வும் பத்திரிகைகள் மிகுதியாகப் பாடுபட்டன. சுதந்திரப் போரில் பத்திரிகைகளுக்கு உரிய பங்கு முக்கியமனது தான். ஆனால், சுதந்திரம் கிடைத்த சில ஆண்டு. களுக்குள்ளாகவே, பத்திரிகைத் துறையும்லாபம் தேடும்.