பக்கம்:வீடும் வெளியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

潭萤夺 வீடும் வெளியும் மாறுதல்களில், விரும்பி வரவேற்கத் தகுந்தனவும் இருந்தன. வேண்டாதனவும் மிகுதியாகவே கலந்து செழித்தன. காந்தி சுந்தரத்துடன் பல நகரங்களுக்கும் போக நேர்ந்தது. அநேக சிற்றுார்களுக்கும் கிராமங்களுக்கும் போக வேண்டியிருந்தது. - முன்பு போக்குவரத்துக்கு வசதியான பாதைகள் இல்லாதிருந்த இடங்கள் எல்லாம் இப்போது நல்ல ரஸ் தாக்களேயும், அடிக்கடி போய்வருகிற பஸ் வசதியையும் பெற்றிருந்தன. அநேகமாக எல்லாக் கிராமங்களும் எலெக்ட்ரிக் லேட் வசதிகளைப் பெற்றுவிட்டன என்று எண்ணவும் இடமிருந்தது. அதன் பயணுக ரேடியோக் களின் அலறலை எங்கும் எப்போதும் கேட்க முடிந்தது. ஆணுலும், காந்திமதிநாதன் பார்த்த கிராமங்கள் பலவும் வறண்டு தரித்திரத் தோற்றம் காட்டுவதாகவே. அவனுக்குப் பட்டன அங்குள்ள மக்கள் வாழ்க்கையில் முன்பிருந்த செழிப்போ, மன நிறைவோ இல்லை என்று அவன் உணரமுடிந்தது. அநேக கிராமங்களில் அடைத்த கதவுகளும் இடிந்து விழும் வீடுகளும் அதிகரித்து வருவதாக அவன் கருதி ஒன். அருகாமையில் மில்லோ, சிமிண்ட் ஆலைபேசன்ற தொழிற்சாலைகளோ ஏற்பட்டிருந்தால், சுற்றுவட்டா ரத்தில் உள்ள கிராமங்களும் சுறுசுறுப்புடனும் பசை யோடு விளங்க வகையுண்டு என்பதை அவன் கண்டான் - - பாரதத்தின் துரைஈரல் போன்றவை கிராமங்கள். தேனடை போன்ற கிராமங்களில் வசிக்கின்ற, தேனிக் கள் போல் உழைக்கின்ற, மக்கள்தான் உண்மையில் பாரத நாட்டையும் அதன் புராதனப் பெருமைகளையும் பாதுகாத்து வருகிருர்கள் என்று மகாத்மா காந்தியும், மற்றும் பல அறிஞர்களும் பேசியும் எழுதியும் வந்திருக் .கிரு.ர்கள். கிராமங்கள் உயர்வடையவேண்டும், விவ சாயம் வளர்ந்தோங்க வேண்டும் என்று யார்தான் சொல்லவில்லை? ஆளுல் கண்கூடாகக் காணக்கூடிய