பக்கம்:வீடும் வெளியும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3தின் வீடும் வெளியும் நகங்களை முற்றுகையிட்டு அவதிப் படுவோர் தொகை சிறிது அல்ல. நகரங்களில் வாழ்க்கை நடத்துகிறவர்கள் உண்மை யில் வாழவில்லை. அவசரம், நெருக்கடி பற்ருக்குறை, அதிகச் செலவு, கட்டுப்படியாகாத வருமானம், கடன், வீண் உழைப்பு என்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு காலவேகம் இழுத்த இழுப்பில் அலேபட்டுத் திண்டாடு கிருக்கள். உயிர்க் குலங்களின் வ ள ர் ச் சி ப் பரிணுமத்தில், ஆரம்ப காலத்தில், வாழ்க்கை என்பது உயிரோடு இருப்ப தற்கான போராட்டம் ஆகவே கருதப்பட்டது. அவ்' வாறே இயங்கியும் வந்தது. பார்க்கப்போனல், அந்நிலை மாறி விடவில்லை. அறிவு வளர்ச்சி, அனுபவ முன்னேற்றம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஏற்பட்டிருந்த போதிலும், இந்த நவீன காலத்தில் கூட, வாழ்க்கை என்பது உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற நிலைமையே நீடிக் கிறது. இப்போது, போராட்டத்தில் ஈடுபடுத்தப் படுகிற கருவிகள், கையாளப்படுகிற முறைகள் முதலியன மாறி சிருக்கலாம். பணம்தான் முக்கியமான கருவி. பதவி, சாதி, படிப்பு போன்றவை துணைக்கருவிகள். மகாத்மா காத்திஜி வளர்த்த இயக்கமும் அதைச் சேர்ந்தவர்களில் பல பேரும் இதற்கு விலக்குகள் ஆகிவிடவில்லை. மாருக, அந்த இயக்கத்தைச் சேர்ந்திருப்பதனால் ஆளும் கட்சி என்ற தகுதியும், அதனல் அதிகார பலமும் இருப்பத. ஞல் வாய்ப்புகளும் வசதிகளும் அதிகமாகவும் சுலபமாக வும் கிடைக்கக்கூடும் என்று எண்ணிச் செயல் புரிகிறவர் கள் அதிகரித்து வருகிருர்கள். பணப்புழக்கமும் தாராள மாகச் செலவு செய்யும் வசதியும் பெருகியிருப்பது போன்ற ஒரு போலித்தன்மை நகரங்களில் காணப்படு: கிறது. பணக் கஷ்டமும் விலை உயர்வும், பற்ருக்குறை யும் உள்ளுர அரிக்கின்றன. இதல்ை, வாழ்க்கையில் அமைதியும் இல்லை. ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள், நாட்டுக்குச் சுதந்தரம் பெற்றுத்தந்தி. பிறகு புதுவாழ்வும் வளமும் நிறுவப்போவதாக லட்சியக்