பக்கம்:வீடும் வெளியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வீடும் வெளியும் எண்ணத்தினலேயே செந்தில்நாயகம் அவனைப் படிக்க வைக்கிருர் என்று பலரும் சொல்லுவது வழக்கம். அது உண்ம்ையாகவும் இருக்கலாம். பெற்ருேர் பலரின் வாழ்க்கை லட்சியமும் அதுதானே! முதலாளி ஐயாவின் தனி மகன் அவன். அவனுடைய, எதிர்காலம் மிகவும் ஒளி நிறைந்ததாக இருக்கும்இருக்கவேண்டும்-என்று, வசதிகள் பலவும் படைத்ததந்தை ஆசை வளர்த்தார் என்ருல், அதில் என்ன தவது இருக்க முடியும்: ஆளுல், அவருடைய கணிப்பே தவறு என்று. அடித்துச் சொல்வதுபோல் அல்லவா பையன் செயல் புரிந்து விட்டான்! எரியும் நெருப்பில் புத்தகங்களையும், சில்க் சட்டை. யையும் வீசி எறிந்துவிட்டு, 'வந்தே மாதரம்! அயல் தாட்டுத் துணிகளை அகற்றுங்கள்: சுதேசியத்தை ஆதசியுங்கள்!” என்று கூவியவாறு காந்திமதிநாதன் கடைமுன் வந்து நின்றதும், கடைச் சிப்பந்திகள் 'எசமான், ஐயோ சின்ன முதலாளி' என்று பதைப்புக் குரல் கொடுத்தார்கள். உள்ளே எதையோ கவனித்துக் கொண்டிருந்த, பெரிய முதலாளி என்னவோ ஏதோ என்று பதறியபடி வெளிப் பக்கம் பார்வையைத் திருப்பினர். தன் மகன் மீது தடியடி பட்டிருக்குமோ, அல்லது காலிப் பயல்கள் தின் அருமை மகனைத் துன்புறுத்துகிருர்களோ என்று; அவர் அஞ்சினர். அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. என்பதை பையனின் சிரித்த முகமும் அமைதியான தோற்றமும் காட்டிக் கொடுத்தன. ஆயினும், அவனுடைய அந்தக் கோலமே விபரீத மானதாய் தோன்றியது அவருக்கு. அவன் அடிபட்டு விழுந்து கிடப்பதைக் கண்டிருந்தால்கூட அவர் அவ்: வளவு திடுக்கிட்டிரார்: இப்போது அவர் உள்ளத்தில் ஆத்திரம், அவமானம், பெருங்கோபம் எல்லாம்: பொங்கிப் புரண்டு குழம்பின.