பக்கம்:வீடும் வெளியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔夺 வீடும் வெளியும் குடித்துக் கெட்ட குடும் பங்கள் அந்தக் காலத்தில் எத் தனை எத்தனையோ, உழைத்துச் சம்பாதித்தவர்கள் அனத்தைக் குடியில் நாசமாக்கினர்கள். அவர்கள் குடும்ப வாழ்க்கை அமைதியின்றி, மகிழ்ச்சியின்றி, சண்டை சச்சரவு மிகுந்து காணப்பட்டது. மதுவிலக்கு ஏற்பட்ட பின்னர், எத்தனையோ குடும்பங்கள் நல்வாழ்வு கண்டுள்ளன, கலாட்டாவும் குழப்பமும் இயல்பாக நில விய அனேக சூழல்களில் இப்போது வசதிகளும் சுகமும் கொலுவிருக்கினறன. முன்பு நல்ல துணிமணிகளை, நகை நட்டுகளைக் காணமுடியாத நிலையிலிருந்த அநேக குடும்பங்களில் இப்போது அழகான ஆடைகளும். கவர்ச்சி அணிகலன்களும், ரேடியோவும் எலக்ட்ரிக் விளக்கும் அழ குறுத்துவதைக் காண முடிகிறது. நகரங்களில் மட்டு கல்ல; கிராமங்களில் கூட. இவை போன்ற நல்ல சீர்திருத்தங்கள் காந்தியத்தின் வெற்றியாகக் கொள்ளப்பட வேண்டியவை. ஆயினும், அவர் பெயரால் வளர்ந்து வந்த இயக்கத்தில் அவிர் பெய ரைக் கெடுக்கும் வகையில் நடந்துகொள்ளுகிறவர்கள் செயலோடும் செல்வாக்கோடும் வாழ முடிகிறதே! இதை எண்ணுகிறபோதுதான் காந்திஜிக்குத் தேர்ல்வி என்று கணக்கிட நேர்கிறது. இந்த விதமாகப் பேசியது அவன் அறிவு. 30. சில நிகழ்ச்சிகள் காந்திமதிநா தனுக்கு எண்ணிப் பார்க்க எத்த னேயோ விஷயங்கள் இருந்தன. ஆனல், நிகண்ப்பதற்கு, உரியவற்றில் வீடும் சொந் தக்காரர்களும் சேரவே இல்லை! அப்படி ஆசையோடு எண்ணுவதற்கு யார் இருந்தர்ர்கள். அவனுக்கு? - அவன் அத்தை மகள் அன்னத்தை நினைவு படுத்தி, சிது மகிழ்வு பெற்றிருக்கலாம். ஆனல் அன்ன்ம் தன். அத்தான் காந்திமதியைப் பற்றி எண்ணி, ஆகை வளர்த்து, கனவுகள் கண்டுவந்த அளவுக்கு அவன் அந்தப்.