பக்கம்:வீடும் வெளியும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும்.ெ வளியும் 五岳雇 பேண்ணைப் பற்றி எண்ணியதில்லை. அந்தக் காலத்தி லேயே அதாவது, அவன் அம்மா உயிரோடிருந்து, அன் னம் அடிக்கடி வீட்டுக்கு வந்து சிரித்துப் பேசி விளையா டிப் பொழுது போக்குவதில் ஆனந்தம் கண்டு வந்த நாட் களிலேயே அவள் தான் அவனைக் கல்யாணம் செய்து கொண்டு, சுகமாக வாழலாம் என்று மனுேராஜ்யம் கட்டி வந்தாள். காந்திமதிநாதன் சுயராஜ்யத்துக்குப் பாடு படக் கிளம்பியதுமே அறியாப் பெண் அன்னத்தின் மனக்கோட்டை தவிடு பொடியாகி விட்டது. கடைசித் தடவையாகக் காந்தி வீட்டிலிருந்து வெளி யேறிய-வெளியேற்றப்பட்ட நாளில் அன்னத்தைப் பார்த்ததுதான் அதற்குப் பிறகு அவன் அவளைக் கான நேரிட்டதேயில்லை. அவளும் அவனைப் பார்ப்பதற்கு சந் தர்ப்பம் ஏற்படவில்லை. காந்தி அந்தப் பெண்ணேப்பற்றி எப்பவாவது அபூர்வமாக எண்ணியிருப்பான். நல்ல பெண். சமூகத் தில் நடைபெறுகிற மாதிரி. எவனே ஒருவனுக்கு மனம் செய்யப்பட்டு. ஏதோ ஒரு ஊருக்கு அனுப்பி வைக்கப் படுவாள் வந்து சேருகிற கணவன் நல்லவனே, கெட்ட வனே, அவள் சகித்துக் கொண்டும். சந்தோஷம் அனு: பவித்தும், சண்டை பிடித்தும் அழுதும், குழந்தைகள பெற்றும்-இப்படியாக எல்லாச் சராசரிப் பெண்களை யும் போலவே அன்னமும் நாளோட்டுவாள். மாப்பிள்ளை வீட்டில் வாழ்வதும், அம்மா வீட்டுக்கு வந்து பெருமைப் பட்டுக் கொள்வதும், உறவினர் வீடுகளில் நிகழக் கூடிய விசேஷங்களுக்குப் போய் வருவதும்தான் அவளுடைய வாழ்வின் சிறப்புகளாக அமையும் என்றுதான் அவன் அன்னத்தைப்பற்றி எண்ணினன். இவ்விதம் நினப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? அதனல், நாளடைவில் அன்ன்ம் அவன் நினை வுப் பரப்பிலிருந்து மறைந்தே போனுள். அவளுக்குக் கல்யாணம் ஆகி விட்டது என்ற செய்தி மட்டும் என்ருே அவன் காதுகளில், வந்து விழுந்தது. சரிதான். நடக்க வுேண்டிய காரியங்கள் ஒழுங்க்ாக நடந்து கொண்டிருக் :