பக்கம்:வீடும் வெளியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 夏岳罗 என்ருன் காந்தி. எங்கிருந்தாலும் நன்ருக, சந்தோஷ கமாக வாழவேண்டும். அதுதான முக்கியம்' என்று கூறி, அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் வழியே நடக்கலானன். 31. திடீர் தீர்மானம் கிந்ேதிமதிநாதன் திடீர் முடிவு செய்து விட்டான். சுந்தரத்தின் தொடர்பை, அவரிடம் வேலை பார்த்து அவர் வீட்டில் தங்கியிருக்கும் வசதியான நிலையை, விட்டுவிடுவது என்று. அதற்குப் பிறகு என்ன செய்வது? எங்கே போவது? எங்கு தங்குவது? இவை போன்ற முக்கிய பிரச்னைகள் அவ்வேளேக்கு அவனை அச்சுறுத்த வில்லை. இந்த இடம் நமக்கு இனிச் சரிட்படாது!’ என்று அவன் உணர்த்தான். இச் சூழ்நிலையை விட்டு விலகிச் செல்வதுதான் நல்லது என்று வழிகாட்டியது. அவன் மனம், உணர்ச்சி மீறிச் செயல்புரிகின்றவன் தானே அவன்! இத்தனைக்கும் சுந்தரம் அவன் விஷயத்தில் குறை எதுவும் வைக்கவில்லை. அவனுக்கு மதிப்புக் கொடுப்பதை அவர் குறைத்துக் கொள்ளவுமில்லை. அவனே ஒரு நண்பன் மாதிரி அவர் நடத்தி வந்தார். ஆளுல் அவருடைய போக்குகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. முக்கியமாக அன்று நடந்த சம்பவம் - சுந்தரம் சொந்த அலுவல்மீது வெளியூர் சென்று திரும்பிய பிறகு, திருநகரில் ஒரு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். பாராட்டு அவருக்கு அல்ல! பிரசங்கி புன்ன வனம் அவர்களுக்குத் தான். - அவருடைய தயவும் சேவையும் சுந்தரத்துக்குத் தேவைப்பட்டன. ஆள் தலையில் ஐஸ் வைக்கும் வகையில் தான்; பிரசங்கியாரின் ஏதோ ஒரு பிறந்த நாளை சாக்காகக் கொண்டு, ஒரு விழாவுக்குத் திட்ட மிடப்பட்டது. சுந்தரம்தான் முன்னின்று முயற்சி செய்தார். செலவுகளையும் ஏற்றுக்கொண்டார்.