பக்கம்:வீடும் வெளியும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 விடும் வெளியும் விழாவின்போது பு என் ன வ னத்தைப் பலரும். ட ராட்டினர்கள். சுந்தரமும் அளவுக்கு ஆதிகமாகவே புகழ்ச்சி மலர்களைத் தூவி அவரைக் "குளிப்பாட்டினர் பிரசங்கியாரும் சுந்தரத்தைப் பெரிதும் புகழிந்து பாரட்டினர். இந்தப் பரஸ்பர முகஸ்துதியும் விழாவும் தகுதியற்ற, தேவை இல்லாத விளம்பர வெளிச்சமாகவே தோன் யது காந்திக்கு. அவன் உள்ளத்தில் ஒருவிதக் கசப்பு உணர்வு படர்ந்தது. தங்கள் சுயப் புராணங்களை டமாரம் அடித்துக் கொள்ள, பணம் செலவு செய்து அவரவர்களே ஆடம் பரமாக நடந்து ஆனந்தப்பட்டுக் கொள்வதை விட, தேவையும் தகுதியும் உடையவர்களுக்கு உதவி செய்வது பயன் உள்ளதாக அமையும் என்று அவன் கருதின்ை. பேச்சுகள் முடிந்த பிறகு, ஒரு விருந்து நிகழ்ந்தது. குறிப்பிட்ட சிலரே அதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். சுந்திரத்தின் பெரிய வீட்டில், தனியான ஒரு பகுதியில் அவ்விருந்து நடைபெற்றது. தடபுடலான சாப்பாடு தான், அச்சமயம் உயர்ந்த ரக மதுவும் வழங்கப் ملكي تساسtلسة இது காந்திமதிநாதனின் உள்ளத்தை வெகுவாக பாதித்தது. யார் யாரோ திருட்டுச் சாராயம் குடிக்கிருர்கள்; அநேகர் பர்மிட் வாங்கிக் கொண்டு குடிக்கிருர்கள். அவற்றை எல்லாம் விட மோசமான தாகவும், தர்மம் கொள்கை முதலியவற்றுக்கு விரோத மானதாகவும் அவனுக்குப் பட்டது சுந்தரத்தின் செய்கை. அவர் இவ்விதம் செயலாற்றுவார் என்று அவன் எண்ணியதே இல்லை. அவன் மனம் அதைக் குறை கூறியது. எனினும், அவரைக் கண்டித்துப் பேச அவனுக்குத் துணிச்சல் இல்லை. விருந்து முடிவதற்குப் பதிைேரு மணி ஆகிவிட்டது. அதன் பிறகும் அவர்கள் ஒய்வு பெறவில்லை. பலர் விடைபெற்றுக் கொண்டுபோன பின்னர், ஒரு அறையில் சீட்டுக் கச்சேரி ஆரம்பமாயிற்று. சுந்தரமும் ஆட்டத்தில்