பக்கம்:வீடும் வெளியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 蟹莎翰” கலந்துகொண்டார். பனம் வைத்துத்தான் விளையாடி ஞர்கள் அவர்கள். அங்கு வெறும் சில்லரைக் காசுகள் புரளவில்லை. ஐந்தும் பத்துமாக நோட்டுகள்தான் கைமாறிக் கொண்டிருந்தன. 孝 * 蜥 காந்திமதி நாதன் சீக்கிரமே தன் அறைக்குப் போய்விட்டான். படுக்கையில் விழுந்து கிடந்தபோதி லும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. புனிதமான லட்சி யத்துக்குப் பாடுபட்ட ஒரு மாபெரும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இவ்வளவு தரக் குறைவாக நடந்து கொள்கிருர்களே என்ற வேதனை அவனுள் குடைந்து கொண்டிருந்தது. நல்லவர்போல் ஊரார் கண்முன்னே காட்சி அளிக்க ஆசைப்படுகிற சுந்தரம் பொது வாழ்வி லும் அந்தரங்கத்திலும் குறைபாடுகள் உடையவர்தான் என்பதை அவன் நாளடைவில் உணர்ந்து வந்தவன் தான். ஆயினும் இவ்வளவு மோசமானவராக இருப் பார் அவர் என்று அவன் எண்ணியதே இல்லை. அன்றைய நிகழ்ச்சிகளின் சிகரம்போல் அமைந்தது. மற்றுமொன்று. - இரவு கனத்துத் தொங்கியது. சுற்றுப்புறம் எல்லாம் சவ உறக்கத்திலும், சுடுகாட்டு அமைதியிலும் ஆழ்ந்து கிடந்தன. சீட்டாடியவர்களின் கூச்சலும் கும்மாளியும்கூட, படிப்படியாய் ஒடுங்கி, அமைதி: புகுந்துவிட்டதாகத் தோன்றியது. காந்தி சிறிது கண்ணயர்ந்திருக்கலாம். ஆலுைம் அசத்தும் தூக்கம் அவனை ஆட்கொள்ளவில்லை. விழிப்பு தும் கண்மூடிக் கிடப்பதுமாயிருந்த அவனுக்கு, மணி என்ன இருக்கும்? ஒரு மணி இருக்குமா?’ எனும் சந்தேகம் குறுகுறுத்தது. அவன் எழுந்து, சன்னல் வழியாக வெளியே பார்த். தான். நிலவு அமுத ஒளியால் உலகைக் குளிப்பாட்டிக்