பக்கம்:வீடும் வெளியும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星雷伊 வீடும் வெளியும் கொண்டிருந்தது. கட்டிடங்கள் வெறும் வெளி, அசை யாத மரங்கள் எல்லாம் புதுமைக்கோலம் பூண்டு திகழ்ந் தன. அம்மோகனப் பேரொளியிலே, ஏதோ அதிசயமாக சோப்பனபுரியைப் பார்ப்பதுபோல அவன் ரசித்து வியந்துகொண்டிருந்தான். இவ்வளவு அற்புதமான அழகுக் காட்சியைக் கண்டு வியக்க மனிதர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லையே! எல்லோகம் உறக்கத்தில் உணர்விழந்து கிடக்கின்ற நிசி வேளையில் அல்லவா இயற்கை இவ்வாறு தன்னை அழகுபடுத்திக்கொண்டு கொலுவிருக்கிறது!’ என்று அவன் நினைத்தான். அத்தி நினைப்பு தவருனது என்று கட்டுவதுபோல, சிசிப்பொலியும் பேச்சுக் குரலும் அவன் காதில் பட்டன. அருகில்தான் எழுந்து ஒலித்தன. அவை. அவன் சிரமப் பட்டு சட்டி எட்டிப் பார்க்கவும் அவன் கண்கள் உண் மையைக் காண முடிந்தது. - இரண்டு பெண்கள் இளம் வயதினர்தான். முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர் களோடு. ஒருத்தி தோள் மீது கையைப் போட்டபடி உல்லாச ஆாக நடந்தார் புன்னேவனம், இன்ளுெருத்தியின் இடையில் கைவளைத்து அவளை அருகே இழுத்துத் தன் ளுேடு சேர்த்தவாறு, ஜாலியாகப் போளுர் சுந்தரம், புன்னேவனம் நகைச்சுவையோடு ஏதோ சொல்லவும் தான் அங்கு சிரிப்பு வெடித்தது. 'அனுபவிக்கிருர்கள்! நிலவு மய இரவை. அவரவர் கள் ரசனைக்குத் தகுந்தபடி அனுபவிக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிருர்கள்' என்று கிண்டலாகக் குறிப்பிட்டது காந்தியின் உள்ளம். அவ்விரண்டு பெண்களையும் அவன் முன்பே பார்த் திருப்பதாகத் தோன்றியது. கூர்ந்து கவனித்தான். ஆமாம்; நினைவு வந்து விட்டது. புன்னவனம் வீட்டில் தான் பார்த்தான். ஒரு சமயம் சுந்தரத்தோடு அங்கு போயிருந்தபோது அவர் அங்கிருந்த அப் பெண்களை அறிமுகம் செய்து வைத்தார். நல்லவங்க சிரமப்படு