பக்கம்:வீடும் வெளியும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 星帮翼 ருங்க, சமூக சேவை அது இது என்ற எங்காவது சான் ஸ் வந்தால், இவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கலாம். உங்க தயவுவேண்டும். இவங்களே நீங்கள் நல்லாப் பயன் படுத்திக்கொள்ளலாம். எல்லா வழிகளிலும்!” என்று. பிரசங்கியார் சொன் ஞர். உள்ளே ஒரு அர்த்தம் வைத் தத்தான் பேசினர். சுந்தரம் புரிந்துகொண்டு சிரித்தார். அப்பெண்களும் சேர்ந்து சிரித்தார்கள். இன்று அவர்கள் பயன்படுகிருர்கள்! பயன் படுத்தத் தயாராக இருப்பவர்கள் உதவி, தயவு என்ற பெயரில் அருள் புரிகிருர்கள். அனுபவிக்கிரு.ர்கள்!” என்று குத்தலாகக் குறிப்பிட்டது. காந்தியின் உள்ளம். :இ என்ன மனிதர்கள்! பொது வாழ்வு மனித சேவை என்பதெல்லாம் போலித்தனமானது, ஏமாற்றும் வேலே என்றல்லவா கொள்ளவேண்டி யிருக்கிறது, இவர்களைப் போன்றவர்களைப் பார்க்கிறபோது என்று கொதித்தது. மனிதரே போல்வர் கயவர். அயோக்கியர்களும் நல்லவர்கள்போல் காட்சி அளிப்பதுதான் காலாகாலமாக நடந்து வருகிறது. இவர்கள் வெற்றிகரமாக வாழவும் முடிகிறதே! எந்த எந்தக் காலத்தில் எத்துறைமேலோங் கிச் சிறப்புறுகிறதோ, அங்கெல்லாம் விரைவிலே வேக மாக, இவர்கள் புகுந்து விடுகிமுர்கள். இவர்களது ஆதிக்கம் வலுத்து விடுகிறது. மதம், கலை, தேசியம் எங்கும், எல்லாத் துறைகளிலும்தான் ஆரம்பத்தில் புனிதத் திருப்பணியாய், மக்களின் வாழ்வை மாண் புறுத்தும் நற்பணியாய். தனி மனித உயர்வுக்கு வழி செய்யும் லட்சியப் பணியாய் தொடங்குபவைதான் எல்லாம். ஆயினும் காலப்போக்கிலே, பெரும்பாலரின் செய்கையால், சுயநல ஆசையால் இவையும் பிழைக்க வழி செய்யும் பிசினஸ் ஆக மாறி விடுகின்றன. மகாத்மா காந்திஜி வழிகாட்டிய அவருடைய ஆத்ம பலத்தால் கவர்ச்சிக்கப்பட்டு லட்சிய வேகம் பெற்ற உண்மைத் தொண்டர்கள் போற்றி வளர்த்த பலம் பொருந்திய இயக்கம், மனிதரின் சிறுமைப் போக்கிளுல், லாப தோக் கில்ை, பதவி மோகத்தால், அதிகார ஆணவத்தால் பல வீனம் அடைந்து விட்டது; மக்களின் நன்மதிப்பை இழந்துவிட்டது” என்று அவன் சிந்தனை அறிவித்தது.