பக்கம்:வீடும் வெளியும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 163 ஏமாற்றங்களேயும் சகித்துக் கொண்டிருக்கவும், பிறகு அவற்றை மறந்துவிடவும் காலம்தான் துணைபுரிகிறது. காலம் மக்களைச் செயலற்றவர்கள் ஆக்குகிறது: செயலூக்கம் பெற்றுத் தீவிரமாய் இயங்கவும் அதுவே தூண்டுகிறது. - மக்கள் தான்-தமது தங்களுடைய என்ற உணர்வில் செயல்புரிந்து, தங்கள் வீட்டை வளப்படுத்தி, தங்களைக் சேர்ந்தவர்களே வாழவைப்பதில் ஆர்வம் காட்டுவதை எடுத்துக்காட்டுகின்ற காலம், வேளைவரும்போது அவர் கள் நாட்டை மறந்து விடுவதில்லை என்று நிரூபிக்க விரும்புவது போலவும் சந்தர்ப்பங்களே விளைவிக்கிறது. நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டிருந்த அந்நியருடன் போராடி உரிமை பெறுவதில் உற்சாகம் காட்டிய மக்கள். வேறு அந்நியர் நாட்டை அடிமை கொள்ளத் திட்டமிட்டுச் செயலாற்றத் துணிகிறபோது சோர்வுற்றுச் சோம்பியிருக்கமாட்டார்கள். இ ைத விளக்க விரும்பியது போலும் காலம்! நாடெங்கும் சுற்றித் திரிய மனம்கொண்டுகிளம்பிய காந்திமதிநாதன், சிறிது காலத்திலேயே, இவ்வுண் மையை உணர்ந்துகொண்டான். காடு பிடித்துத் தன் நாட்டின் வளத்தையும் வலிமை யையும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று வெறிபிடித் துப் படை எடுக்கத் துணிந்தது, நண்பனுய் நடித்துப்பின் பகைவன் எனக் காட்டிக்கொண்ட சீன. பாரத நாட்டிலே பெரும் உணர்வு விழிப்பு. நகரங் கள்தோறும் மக்களின் அணிவகுப்பு. எதிர்ப்பைக்காட்டும் பகைவன்மீது வெறுப்பைக் கொட்டும்-வீர் முழக்கங்கள். ஆண்களும் பெண்களும் நாட்டுப் பற்று மங்கிவிடவில்ல்ை என்று நிரூபிக்கும் செயல் மலர்ச்சி-இவற்றை காந்திமதி நாதின் கண்டான். அவனது உணர்வு கிளர்ந்தது. உற்சாகம் பொங் கியது. அவனும் பல ஊர்வலங்களில் கலந்து கொண்