பக்கம்:வீடும் வெளியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱荔 வீடும் வெளியும் தேடிவைத்த .ெ சாத்'து அழியவே இல்லை. பிள்ளைக் கண்ணுவின் மனைவி ஆவுடையம்மாள் கொண்டு வந்து சேர்த்திருந்த சொத்தின் அளவும் பெரிதுதான். செல்வர் பிள்ளைக்கண்ணு பணக்காரர்கள் கடைப் பிடிக்க வேண்டிய தர்மங்கள் பலவற்றையும் வெற்றி கரமாக அனுஷ்டித்தார். அவருடைய தந்தை வாங்கிப் போட்டிருந்த கிராமம் ஒவ்வொன்றிலும் ஒரு மாடி வீடு கட்டியதோடு, அவர் வந்து போகிற சமயங்களில் வசதிகள் செய்து இன்புறுத்துவதற்காக தனித்தனிப் பெண்மணிகளையும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அவர் மகன் பிறவிப் பெருமாள் ஊரில் மேடை முதலாளி என்ற சிறப்பைப் பெற்று விட்டார். அதற்குக் காரணம் அவர் எப்போதும், பங்களா வீட்டின் மாடி யிலேயே வாசம் செய்ததுதான். அத்துடன், கம்மா பொழுதுபோக்கு ஆகவும் ஏதோ ஒரு பிசினஸ் இருக்கட், டுமே என்து அவர் ஆரம்பித்திருந்த துணிக்கடையும் கடை வீதியில் ஒரு மாடியில்தான் அமைந்திருந்தது. பிறவிப் பெருமாளின் த ப் அவரைக் கருவில் தாங்கியிருந்த சமயத்தில் குல்கந்தும் குங்குமப்பூவும் உாலும் அதிகமாகவே சாப்பிட்டிருந்திருக்க வேண்டும்! அதகுல்தான் குழந்தை வெள்ளை வெளே ரென்று பிறந்திருந்தது. பிறகும் போஷாக்கிற்கும் வளமான கவனிப்புக்கும் குறைவு எதுவும் இராத காரணத்தினுலே, பிறவிப்பெருமாள் மொழு மொழு வென்று வெண் ணெய்க் கட்டியில் உருட்டித் திரட்டிய கிருஷ்ணன் பொம்மை மாதிரி வளரமுடிந்தது. கிளாஸ்கோ, ஆஸ்டர்மில்க் போன்ற உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் விளம்பரங்களில் வெளியிடு கிருர்களே தளதளப்பான குழந்தைகளின் உருவங்களை, அவற்ருேடு போட்டியிடுகிற விதத்தில்தான் பிறவிப் பெருமாளும் இருந்தார். அவருக்குத் தேவைப்படுகிற உணவுகள் எல்லாம் சீமையிலிருந்து கப்பவில் வந்து இறங்கி, பெரிய வெள்ளக்காரன் கம்பெனி'யில் கொலு விருந்து விற்பனைக்கு கிடைப்பவைதான். பிரிட்டானியா பிஸ்கட்டும், ஹன்ட்லி பால்மர்ஸ் பிஸ்கட்டும் (சீமைச்