பக்கம்:வீடும் வெளியும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் #3 காட்டியதோடு, தம் வீட்டில் காந்தி படத்தை மாட்டி வைத்தார். அத்துடன், ஊராரே வியந்து போற்றும்படி ஏதாவது செய்தே தீரவேண்டும் என்றும் திட்டம் தீட்டினர். தமது திட்டத்தில் அவர் தாமே ஆழ்ந்திருந்த சமயத்தில்தான், கவிராயர் வந்திருக்கிருர் என்று வேலைக்காரன் அறிவித்தான்.

  • +
  • கவிராயரா? யாரு அவரு’ என்று கேட்டார்

முதலாளி, அங்கே தலை நீட்டிய சொக்கையாவைப் பார்த்ததும். "ஒ சொக்குவா!' என்று அலட்சியமாகச் சொன் ஞர். 5. லட்சிய வேகம் புது உருவம் பெற்றவன் போல் புதிய உடையில் காட்சி தந்த மகனைப் பார்க்க, முதலாளி செந்தில் நாயகத்துக்கு உள்ளமும் வயிறும் பற்றி எரிவது மாதிரி இருந்தது. இவனே என்ன செய்தாலும் ஆத்திரம் தீராது என்று புகைந்தது அவர் மனம். ஏன்டா, உன் மூளையை எங்கே அடகு வைத்தே? இப்படி எல்லாம் காரியம் செய்வதற்கு வெட்கமாக இல்லே உனக்கு?’ என்று சீறிஞர் தந்தை. காந்திமதிநாதன் சீற்றம்கொள்ளவும் இல்லை; முகம் சிவந்து தலைகுணியவு மில்லை. வாடாத புன்னகையோடு நிமிர்ந்த தலையோடு தந்தையைப் பார்த்தவாறே, திடமாக அறிவித்தான் நல்ல செயல் புரிகிறபோது நான் ஏன் வெட்கப்பட வேண்டும்?' என்று. அவனுடைய அமைதியும், நிதானமான பேச்கம் அவருடைய ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கின. 'திமிரைப் பாரேன். எதுடா நல்ல காரியம்? நீ செய்றது வீ. வெ.இ-445