பக்கம்:வீடும் வெளியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 易露 செந்தில்நாயகம் நரசிம்மாவதாரம் எடுத்தவர் போல், கோபத்தால் முகமெல்லாம் கோரமாகத் தோன்ற வேகமாக எழுந்தார். அவனை அடிக்க விரை கிறவர் போல் முன்னே பாய்ந்தார். எனினும் ஆத்தி தத்தை ஒருவாறு அடக்கிக்கொண்டு 'ஏய், என் கோபத்தை வீணுக் கிளறிவிடாதே. நீ புஸ்தகம் படிச்ச பெருமையை எல்லாம் என்கிட்டே காட்டவேண்டாம். எனக்கு வர்ற வரத்துலே உன்னை என்ன செய்வேளுே எனக்கே தெரியாது. ஒழுங்கா, மரியாதையா, நல்ல பையன நடக்கிறதாக இருந்தால் இங்கே இரு. முதல்லே இந்தத் துணியை அவிழ்த்து எறிந்து விட்டு, வழக்கமான உடுப்புகளைக் கட்டிக் கொள்’ என்று நல்லுரை புகன்ருர், காந்திமதிநாதன் சிரித்தான். வெறும் வேஷம் போடும் நினைப்பில் நான் இந்த ஆடையை அணிந்து கொள்ளவில்லை. இன்று முதல் என்றும் என்னை இந்த உடையில் தான் காணலாம்' என்ருன். "இனி நான் பள்ளிக்கூடம் செல்லப் போவதுமில்லை. தேசியப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபடப் போகிறேன்.” "உனக்கு ஏன் இந்தப் புத்தி: தடியடி, ஜெயிலுக்குப் போவது எல்லாம்.’’ என்று அம்மா உணர்ச்சிப் பெருக்கோடு பேச ஆரம்பித்தாள். ‘'எது வந்தாலும் நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வேன். இனி மகாத்மா காந்தியே என் தெய்வம். அவருடைய வழிதான் என் வாழ்க்கை வழி' என்று அவன் மன உறுதியுடன் கூறிஞன். "அப்படியானுல் உனக்கு இந்த வீட்டில் இடமில்லை. வெளியே போ!' என்று கூச்சலிட்டார் தந்தை. 'இதுதான் எனது முதல் சோதனை. இதற்கு நான் தயங்கவோ அஞ்சவோ போவதில்லை” என்று பணிவுடன் சொல்லிவிட்டு, அவன் அப்படியே திரும்பி வெளியே நடக்கலாஞன். -