பக்கம்:வீடும் வெளியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

然是 வீடும் வெளியும் காந்தி, ஏ ஐயா!' என்று அலறத் தொடங்கிளுள் நீ உள்ளே போ. பாணன் கழுதை பரதேசம் போளுல், தானே போய் தானே திரும்பும்! இவரு மைனர் சவுடால் எல்லாம் எத்தனை நாளேக்கு? வயிறு: காய ஆரம்பித்ததும் தானுகவே வீட்டைத் தேடி இருவான்’ என்று முதலாளி உறுமிஞர். பர்வதித்தம்மாள் கண்களைக் கசக்கியபடி அடுப்பிங் கரைப் பக்கம் போளுள். - . காந்திமதிநாதன் கலக்கமோ, கவலையோ கொண்டு. விடவில்லை. அவனுடைய உள்ளத்தில் உறுதி இருந்தது; உடலில் இளமை இருந்தது: எண்ணத்தில் வேகம் இருந்தது. அவனிடம் புதியதோர் ஊக்கமும் உற்சாக மும் புகுந்திருந்தன. அவன் மனம் ஆனந்த மயமான, லட்சிய ஒளி படிந்தகனவுகளேச் சிருஷ்டித்து மகிழ்ந்தது. "வருக் காலம் நம்முடையது. நாம் வாழ்ந்து உயர்வோம். நமக்கு நாமே துணை என்று அவனுள் ஒரு சக்தி ஒலி செய்தது. - சூழ்நிலையும், காலவேகமும், நாட்டு மக்களின் புதிய உத்வேகமும் எத்தனை எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கைப் பாதையில் திசை மாற்றம் ஏற்படுவதற்குத் தாண்டுதலாக அமைந்த காலம் அது. காந்திமதி நாதனும் அவர்களில் ஒருவன் ஆளுன், அவன் அந்த ஊரைவிட்டு வெளியேறி, எங்கே பாவது போய்விடலாமா என்று எண்ணிஞன் முதலில். அப்படிச் செய்வதனால் வீட்டுக்குப் பயந்து ஓடிவிட்டான் என்று பிறர் சிரிக்க நேரிடலாம். நாம் இங்கேயே இருந்துதான் லட்சியப் பணி புரியவேண்டும் என்றது அவன் சிந்தனை, நண்பன் நடராஜனக் கண்டு பேச வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது அவனுக்கு. அவன்தானே அன்று பிற்பகலில் உணர்ச்சி வேகத்தோடு செயல் புரிந்தவன்; தன்னையும் செயலுக்குத் தூண்டியவன் என்ற நினைப்புத்