பக்கம்:வீடும் வெளியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 麗影 திான் அதற்குக் காரணம். கடை முதன்ாளியான தந்தை-சுயேச்சையாகத் தொழில் புரிந்து சுக வாழ்வு நடத்துகிறவர்-மகனின் செயலினுல் வெறித்தனம் பெற்றுவிட்டபோது, போலீஸ்காரரான ஒரு தந்தைஅரசாங்கத்தை நம்பி வாழ்க்கை நடத்துகிற மாதச் சம்பளக்காரர்-சர்க்காரை ைதி ர் க் கு ம் முயற்சியில் உற்சாகம் காட்டிய தனது மகனின் போக்கைக் கண்டும் கேட்டும் அமைதியாக இருந்துவிட முடியுமா என்ன? வீட்டில் அந்த மகனுக்கு எவ்விதமான வரவேற்பு கிட்டியது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற இயல்பான அவா வெளியேற்றப்பட்ட மகனுக்கு" உண்டாயிற்று. அவன் தெருத் தெருவாய் கடந்து, நடராஜன் வசித்த தெருவை நோக்கி நடந்து கொண்டிருந்தான். நடராஜன் தந்தை குடியிருந்த வீடு போலீஸ் லயனில் அமைத்திருக்கவில்லை, முன்பு ஒன்றிரு தடவைகள் காந்தி நண்பனுேடு அவன் வீட்டுப் பக்கம் போனதும் உண்டு. அப்போதெல்லாம் வீட்டுக்குள் போகாமல், தெரு முனையிலேயே காத்து நிற்பதுதான் வழக்கம். - 'இப்போது வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்படுமோ? நடராஜன் தந்தை வீட்டில் இருந்தால் என்ன சொல்வாரோ?’ என்ற குறுகுறுப்பு அவன் உள்ளத்தில் எழுந்தது. இந்த நினைப்பினுல் அவன் தடையில் தயக்கமும் தளர்ச்சியும் சேர்ந்திருந்தன. இச் சந்தர்ப்பத்திலும் அவன் வீட்டினுள் அடி எடுத்து வைக்கவேண்டிய அவசியம் ஏற்படாதவாறு, நடராஜனே எதிரே வந்து விட்டான். அவன் பெரிய துண்டினுல் உடம்பைப் போர்த்தியிருந்தான். என்ன காந்தி, இந்தப் பக்கம் எங்கே வந்தே?" என்று விசாரித் தான் அவன். 'வா, நடந்து கொண்டே பேசலாம். இங்கே நிற்கவேண்டாம்!" என்று நண்பன் தோள்மீது கை போட்டவாது நடக்கலாஞன்.