பக்கம்:வீடும் வெளியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

意莎 வீடும் வெளியும் கசந்திமதிநாதன் நடந்ததிைச் சொன்னுன், நடராஜன் சிரித்தான். இங்கும் அதே கதைதான். வெறும் ஏச்சும் பேச்சும் மாத்திரம் கிடைக்கவில்லை. சரி யானபடி உதையும் கிடைத்தது. என் அப்பா இடுப்பி லுள்ள போலீஸ் பெல்ட்டைக் கழற்றி கண்ணு மூக்கு என்று பாராமல் சுழற்றிச் சுழற்றி அடித்தார். பெல்ட்டில் உள்ள ஆணி என் விலாச் சதையைப் பிய்த்துவிட்டதை விளக்கு வெளிச்சத்தில் காட்டுறேன், பாரு. நான் போட்டிருந்த கதர்ச் சட்டையைக் கிழித்து எறிந்தார். நீ எக்கேடும் கெட்டு நாசமாப் போடா சனியனே! என் தலைக்கு ஏண்டா வினை வைக் கிறே? என்னையும் குடும்பத்தையும் தெருவிலே நிறுத்தி விடுமேடா உன் போக்கு என்றெல்லாம் ஏசிஞர். இனி இந்த ஊரிலேயே இராதே; வீட்டுப் பக்கமே தலை காட்டாதே என்று விரட்டி விட்டார். நான் உன்னைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் கினடிபினேன்’ என்று அவன் அறிவித்தான். உம். நீ எங்கே போகப் போறே?’ என நண்பன் பரிவுடன் கேட்கவும், நடராஜன் எங்கே என்று சொல்வது சித்தம் போன போக்கில் போக வேண்டியது. தான்! இந்த ஊரில் நான் மறுபடியும் மறியல் செய்தால், என்னேப் பிடித்துக்கொண்டு போனல், என் அப்பாவுக்கு வேலே போய்விடும். அதனலே வேறு எங்காவது ஒரு இனரில் போய் மறியலில் கலந்துகொள்வேன். நம்மைப் போலே பையன்களைப் பிடித்துக்கொண்டு போனுல், ஜெயில் தண்டனை கொடுப்பது இல்லையாம். போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டு போய், நூறு மைலுக்கு அப்பால் எங்காவது காட்டு வெளியிலோ. கிராமத்துப் பக்கமோ இறக்கிவிட்டு விடுகிரு.ர்களாம். எனக்கும் அப்படி யாத்திரை சான்சு கிடைக்கலாம். வெகு தூரம் பிரயாணம் போய்விடலாம் அல்லவா’ என்று கூறி. வேடிக்கையாகச் சிரித்தான். . அவனுடைய மைேதிடம் அந்த நேரத்திலும் வியந்து போற்றப்பட வேண்டியதாகவே தோன்றியது.